பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



எவன் சொன்னான் அப்படி ஒருத்தன் இருந்தான் என்று. ஹிஸ்டாரிகலி ஃபால்ஸ் (historically faise) சேரன் செங்குட்டுவனு ஒருத்தன் கிடையாது. கடல்பிறக்கோட்டிச் செல்வத்தைப் பெற்றவன். பதிற்றுப் பத்துல இருக்கான். அதுல கடல் வெற்றிதான் இருக்கே தவிர, பூமி வெற்றியே கிடையாது. இதுல கடல்வெற்றியைப் பற்றி ஒரு பாட்டுக்கு ஒருவரிகூட இல்லை- இந்தச் சிலப்பதிகாரத்துல. அப்ப இவனல்ல. அப்ப எவனோ ஒருத்தன். ஏதோ வச்சான் அடிச்சான் தீர்ந்துச்சு. அதப்பத்தி ஒரு தப்பில்ல.

125. இளங்கோவடிகள்...

இளங்கோவடிகள் எனக்கு யாருன்னு தெரியாது. சிலப்பதிகாரத்துக்கு ஒரு ஆத்தர் இருந்திருக்கணும். அந்தக் காலத்துல ஜைனம் பெண்ணுக்கு மோட்சம் இல்லைங்கிறது. இந்தாண்ட அவ பெண்ணு, அவ இறைவனிடத்திலே ஒரு பாதின்னு சொல்றவன். இந்தண்ட சாக்தன் எல்லாம் பெண்தான் என்று சொல்றவன். இதன் நடுவுல மாட்டிக்கிட்டவன் ஒரு பெண்ணை, பணக்கார வீட்டுல பொறந்து, பணக்காரனைக் கல்யாணம் பண்ணி, வாழ்வை இழந்து, ஒரே பிறப்புல மோட்சம். தான்மட்டும் ஏறவில்லை புருஷனையும் ஏத்தி வுட்டுட்டா. இப்படி ஒரு கான்செப்ட்டுக்குக் கொண்டு வரணும்னா- அவன் யாரோ தெரியலங்க. துறவியோ, இல்லறத்தானோ, சேரனோ, யாரோ தெரியலிங்க. ஆனால், இதிலிருந்து வர்ர அந்த ஆத்தர் இருக்கறானே. அதுவரையில தமிழ் உலகம் காணாத ஒரு ஆதர். இந்த மாதிரி கான்செப்ட் அதுவரையிலும் யாரும் செய்யவில்லை.

126. சிலப்பதிகாரத்துக்குள்ள இருக்கிற ஒரு ஆத்தர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/106&oldid=481854" இலிருந்து மீள்விக்கப்பட்டது