பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்■99
சிலப்பதிகாரத்துக்குள்ள இருக்கிற இளங்கோ கண்ட கனவு இருக்கே, தமிழ் உலகம் அன்றுவரை காணாத ஒரு கனவு. ஒரு புது கான்செப்ட்'
127 சிலப்பதிகாரம் மாதிரி மணிமேகலை ஏன் பாராட்டப்படவில்லை?
நான் ஒன்று கேட்கிறேன். கவர்மெண்ட் யாரோ, அவங்களுக்கு ஏத்த மாதிரி தாளம் போடுற ஆளுங்க நீங்க.
128 போட்டா சொல்லுங்க... அப்படியில்லேனா
போட்டதுனாலதான் சொல்றேன். அது மாதிரி உள்ளே இருக்கும் வரைக்கும். அந்தக் கதைதான் இதுவும். வேறு ஒண்னும் பண்ண முடியாது. ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வந்து விடுகிறோம். அந்தக் கட்டுப்பாட்டுக்குள்ள வந்தவுடனே, காப்பியமும் ஒரு கட்டுக்குள்ளே நின்று விடுகிறது. அந்தக் கட்டுப்பாடு இளங்கோவடிகளுக்கு இல்லை. சாத்தனுக்குப் புத்த மதத்த பரப்பணுங்கிறது 'எய்ம். அவன் காலத்திலே புத்திஸ்ட் கான்செப்டே' கிடையாது. அது செத்துப்போச்சு. அதுக்கு ஒரு இன் ஜெக்சன் போடனும்னு நினைக்கிறான். வேற எய்ம்' என்ன அவனுக்கு?
புரபகென்டா.
அவ்வளவுதான். மலர்வனம் புக்க காதை, அறக் கோட்டம், இரண்டொரு காதையில கவிதை நன்றாக இருக்கும். மற்றவையெல்லாம் also நன்றாகத்தான். ஆகவே அவன் ஒரு குறிக்கோள் வைச்சுட்டான்னா, அப்புறம் என்ன பண்ண முடியும்? குறிக்கோள் உள்ளவன் இவன்.