பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்101



திரிகடுகம்- இந்த மாதிரி கண்றாவிகளெல்லாம். என்னம்மோ சொல்ல வேண்டியதெல்லாம் பாட்டில் சொன்னாங்க.

ஏட்டுல உரைநடையா எழுதறதைக் காட்டிலும், பாட்டா எழுதரது ஈஸி’. அன்னைக்குப் பாடம் பண்ணுறது ஈஸி. அதை மறந்துடாதீங்க. அவ்வளவுதான். ஆகையினால அதைப் பண்ணினான். அதப் போயி கவிதையாவது, கண்றாவியாவது... அது சங்க காலத்திலேயோ பிற்காலத்திலேயோ அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. பத்துப்பாட்டு, எட்டுத் தொகை சமாச்சாரங்கள்ள இது கிட்டவே வரல. பின்னால வந்த சமாசாரம்.

133. உதாரணத்துக்கு வந்து, மணிமேகலைல சொன்னிங்க, இந்த மாதிரி ஒரு குறிக்கோளுக்காக அப்படிப் பண்ணாங்கன்னு. பெரியபுராணத்தை எழுதும்போது சேக்கிழாரும் ஒரு குறிக்கோளுடன்தான்...

அங்கதான். நான் அதை எழுதினேன். சைவத்தப் பரப்பரது அவருக்கு முக்கியமல்ல. அவர் பார்த்தது, இரண்டாம் குலோத்துங்கள் காலத்துல பீகார்ல இருந்து கன்னியாகுமரி வரை சோழ சாம்ராஜ்யம். inclusive of Andhra and Karnataka. அப்ப சுத்தி வரும்போது தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடுது- ஆனா ஒரு உண்மையான டாக்டர், புதுபுதுனு உப்புனாக் கையப் புடிச்சுப் பார்த்துட்டு நாளானைக்கி வெடிக்கப்போரான்னு தெரியும். ஆனா பெத்தவக்கிட்ட போயி அம்மா. இவன் இப்படியே போய்க்கிட்டு இருந்தான்னா, நாளன்னைக்கி வெடிச்சுடு வா?ன்னு சொன்னா, பையனுக்கு ஏதும் கண்பட்டுடு மோன்னு சொல்லுவா. அவக்கிட்ட எப்படிச் சொல்ல