பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெரிய புராணத்தில் சில வினாக்களும் விடைகளும்

140. கோட்புலி நாயனார் இறைவனுக்கு வைத்த நெல்லை உண்டதற்காக - பச்சிளம் குழந்தையையும் கொன்றது சரிதானா?

141. சிறுத்தொண்ட நாயனார் பிள்ளைக்கறி சமைத்தது நியாயம்தானா?

142. இயற்பகை நாயனாரிடம் அவர்தம் துணைவியாரை இறையடியார் வேண்டியதும், அவர் தந்ததும் சரிதானா?

143. சண்டீசர் பதம் பெற்ற விசாரசருமர், தம் தந்தையின் கால்களை வெட்டியது முறைதானா?

ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்திற்கு உடந்தையாகவோ, அதில் பங்கு கொண்டோ இருப்பவர் களும் குற்றவாளிகள்தாம்.

நாம் ஏறிச் செல்லும் மகிழ்வுந்து ஒட்டுநர் வேறு ஆளாக இருக்கலாம். அவர் ஒருவர்மேல் வண்டியை ஏற்றிப் பெருங்குற்றத்தை இழைத்துவிட்டால் ஒட்டுபவர் மட்டுமே அதற்குப் பொறுப்பு- நமக்கதில் தொடர்பு இல்லை என்று சொல்ல முடியாது. வண்டிக்குச் சொந்தக் காரராகிய நாமும் அக்குற்றத்திற்கு ஒரளவு பொறுப் பாளிகள் ஆவோம்.

இன்றைய சட்டம் கூட இதனை ஏற்றுக் கொண்டு Vicarious Liablity இதற்குப் பெயரும் இட்டுள்ளது.

இதனை நன்கு அறிந்தவர் சேக்கிழார்.

குற்றம் செய்த யானையை வெட்டி வீழ்த்திய எறி பத்தர் கடமையிலிருந்து தவறிய யானைப் பாகனையும்,