பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்107அதனை வழி நடத்திச் செல்ல வேண்டிய கடமை தவறிய ஆட்களையும் கொன்றுவிடுகிறார்.

இதனை அறிந்த அரசன், அவர்களைப் பணிக்கு அமர்த்திய தவறு தன்னுடையது ஆதலால் தானும் அதற்குப் பொறுப்பு என்று கூறித் தம்மையும் கொல்லுமாறு வாளை நீட்டுவது எறிபத்த நாயனார் வரலாற்றில் சேக்கிழாரால் சொல்லப்பட்டிருக்கக் காணுகின்றோம்.

ஆகவே, இறைவனுக்கு என்று நெல்லை வைத்து அதனைத் தொடுபவர் பெருங்குற்றத்திற்கு ஆளாவர் என்று ஊரறிய "விரையாக்கலி" என்று மக்களுக்கு அறிவித்த கோட்புலியார் அந்த நெல்லை உண்ட தாயை வெட்டியது சரியே. அவள் பாலை உண்ட குழந்தையும் vicarious liability-யின்படி அக்குற்றத்திற்கு ஆளாகிறது.

மனிதாபிமானம் என்ற அடிப்படையில் அடியார்கள் வாழ்க்கையில் விளக்கம் காண முற்படுவது சரியன்று; சராசரி மனிதர்களிடமிருந்து பல மடங்கு உயர்ந்து நிற்கின்ற இந்த நாயன்மார்கள், கொள்கை என்ற ஒன்றை எடுத்துக்கொண்டால் ஒரு நாளும் அதனைவிட மாட்டார்கள். நாம் அவர்கள் நிலையிலிருந்து அவர்கள் செயலை ஆராய வேண்டுமே தவிர, நம்முடைய நிலைக்கு அவர்களை இழுத்து வந்து ஆராய்வது சரியன்று.

தனி ஒருவனைக் கொல்வது கொலைக் குற்றம். நாட்டைக் காப்பதற்காகக் கடமை பூண்டு தன்னை ஒத்த மனிதர்களைப் பகைவர் என்று பெயரிட்டுக் கொலை புரிவது வீரம் என்று பேசப் படுகின்றது; அதற்கு விருதும் வழங்கப்படுகின்றது.

ஆயினும் கொலை, கொலைதானே! அப்படியிருக்க இந்த இரண்டு கொலைகளையும், வேறுபடுத்தி ஒன்றுக்கு