பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்111எனவே "இது என்னிடத்தில் ஏற்கனவே உள்ளது. எடுத்துப் போகலாம்" என்கிறார்.

அகங்கார, மமகாரங்களை அறவே ஒழித்து இறைவுணர்வில் ஆழ்ந்து நிற்கின்றவர்கள் செய்கின்ற செயலை, அவர்களுடைய அளவு கோலைக் கொண்டு அளக்க வேண்டுமே தவிர, நம்முடைய அளவு கோலில் அளப்பது சரியன்று.

லிட்டரும், மீட்டரும் அளவுக் கருவிகள்தான். பாலை லிட்டரில் அளக்க வேண்டும். துணியை மீட்டரில் அளக்க வேண்டும். லிட்டர் அளவுக் கருவி இல்லாத பொழுது, மீட்டரும் அளவுக்கருவிதானே என்று கூறிக் கொண்டு, பாலை மீட்டரில் அளக்க முற்படுவது சரியான செயல் ஆகாது.

ஆகவே அடியார்கள் செயலை அவர்களின் அளவுகோலைக் கொண்டுதான் அளக்க வேண்டும்.

சண்டேசர் என்று பின்னர்ப் பெயர் பெற்ற விசாரசருமர், சிவபூஜையில் ஈடுபட்டிருந்தார். பால் குடத்தில் அபிடேகத்திற்குரிய பால் வைக்கப்பட்டிருந்தது.

பால் ஒன்றுதான். ஆனால், காப்பி போடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பாலை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இறைவனின் அபிடேகத்திற்கு உரியது என்று குறிக்கப்பட்டு ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டால் அதன் தன்மையே வேறு.

அரசு ஊழியர்களுக்கு இது நன்கு தெரியும். ஒரு குறிப்பிட்ட செயலுக்கு என்று பணத்தை ஒதுக்கி வைத்து விட்டால் (Earmarked Fund) எக்காரணத்தைக் கொண்டும் அதை மற்றொரு துறைக்குப் பயன்படுத்தக் கூடாது.