பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



3. பரதனிடத்தில் பண்பு வளர்ச்சி உள்ளது.

'நின்னினும் நல்லன் ஆயிரம் இராமர்;
எண்ணில் கோடி இராமர்கள்'

என்றெல்லாம் கம்பர் பாடுகிறார். இப்படி மற்றவர்களுடைய பண்பு வளர்ச்சி குறிக்கப்படவில்லையே. காரணம் என்ன?

இங்கே பண்பு வளர்ச்சி என்று சொல்ல நான் விரும்பவில்லை.


4.

'தள்ளரிய பெருநீதித்தனிஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையான்'

- என்று விஸ்வாமித்திரர் குறிக்கின்றாரே?

பரதனைப் பொறுத்தமட்டில் அவன் என்றுமே ஒரே நிலையில்தான் இருக்கின்றான். ஆனால், நீங்கள் காட்டிய மூன்று அடைகளும் இரண்டு பேரால் தரப்படுகின்றன. இதனை, பரதனுடைய வளர்ச்சி என்று சொல்வதை விட்டு, ஒவ்வொருவர் கணிப்பிலே அவன் எப்படி இருக்கிறான் என்பதுதான் அதனுடைய பொருள். ஒருவரைப் பொறுத்தமட்டில் ஆயிரம் இராமராகக் காட்சி அளிக்கிறான். ஒருத்தியைப் பொறுத்தமட்டில் எண்ணில் கோடி இராமராக இருக்கிறான். எனவே பரதனுடைய வளர்ச்சி என்றும் ஒரே படியாகத்தான் இருக்கிறது. காண் பாருடைய காட்சிக்கேற்ப,

'ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ?'

என்று குகனும்

'எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ'

என்று கோசலையும் அவரவர் கணிப்பிலே காண்கின்றனர்.