பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



இதே நிலைமைதான் விசாரசருமர் வரலாற்றில் நிகழ்கின்றது. அவர் குடிப்பதற்கென்று பாலை வைத்திருந்து அதை ஒருவர் காலால் இடறிவிட்டால் உலகம் ஒன்றும் நின்றுவிடாது. ஆனால், இறைவனின் அபிடேகத்திற்கு என்று குறிக்கப்பட்ட பொழுது அந்தப் பால் தனிப் பெருமை பெற்று விடுகின்றது.

விசாரசருமரின் தந்தை வைதிகன். ஆதலால் சிவலிங்கத்தையோ, அபிடேகத்தையோ, சிவபூசையையோ அவன் நம்பாதவன், ஏற்றுக் கொள்ளாதவன். ஆகவேதான் அவன் அந்தக் குடத்துப் பாலைக் காலால் இடறினான்.

விசாரசருமர் சிவ அபராதம் நிகழ்ந்துவிட்டதற்காகக் கீழே கிடந்த குச்சியை எடுத்து அவன் காலில் அடித்தார். சிவ அபராதம் ஆதலால், குச்சி கோடலியாக மாறிற்று. இதில் விசாரசருமர் செய்த செயல் ஒன்றும் இல்லை. இதைப் புரிந்துகொள்வது எளிது.

நம்முடைய வீட்டில் ஒருவன் பணத்தைத் திருடி விட்டால் அதற்குரிய தண்டனை வேறு. அரசாங்கப் பணத்தைக் கையாடிவிட்டால் அதற்குரிய தண்டனை வேறு.

இரண்டும் பணத்திருட்டுத்தான். ஆனால் ஒன்று தனி மனிதராகிய நம்முடைய பணம். மற்றொன்று அரசின் சொத்தாகிய பொதுப்பணம். எனவேதான் தண்டனை மாறுகிறது.

குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குடத்துப் பால் அன்று, அபிடேகத்திற்குரிய பால் ஆதலால் பெருந் தண்டனை கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/120&oldid=481020" இலிருந்து மீள்விக்கப்பட்டது