பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்வளர்ந்திருக்கிற முறையிலே இதை முடிவு செய்ய முடிகின்றது.

ஒரு மாபெரும் வல்லரசு தோன்றுவதற்கு முன்னேயும், அந்த வல்லரசு வீழ்ச்சி அடையும் நிலையிலும்தான் காப்பியம் தோன்றுமென்று உலகத் திறனாய்வாளர்கள் - எந்த மொழியாக இருப்பினும்- சொல்கிறார்கள். அந்த முறையிலே பல்லவ சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைந்து விடுகிறது. பிறகு, சோழப் பேரரசு இன்னும் தோன்ற வில்லை. தோன்றவேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த நிலையிலே கவிச் சக்கரவர்த்தி தோன்றித் தன்னுடைய ராமகாதையைப் பாடுகிறான். அதேபோல மிகப் பிரசித்தமாக வளர்ந்த சோழ சாம்ராஜ்யம் 300 ஆண்டுகள் கழித்துக் கீழே விழப் போகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலே சேக்கிழார் தோன்றிப் பெரிய புராணத்தைப் பாடுகிறார். ஆகவே, பல்லவ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி, சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கம்- அதிலே கம்பன் தோன்றுகிறான். ஆகவே 9ஆம் நூற்றாண்டு என்பது பொருத்தமாகப் படுகிறது.

8. பரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிய செய்தியைச் சொல்ல வருகின்ற கம்பர்- இராமனைப் பற்றிக் குறிப்பிடுகிறபொழுது,

‘பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து நாளும்
கரை தெரிவுஇலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ’

என்று சொல்வது- நாம் அடைந்து வருகிற இன்பத்தைவிட, எப்பொழுதுமே பேரின்பம் (Eternal bliss) தருகின்ற ஒரு முறையிலே அவன் யோக நிலையிலே இருந்துவிட்டானா என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஐயாவின் கருத்து என்னவோ?