பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்9



இராமனைப் பொறுத்தமட்டில் பரதனைத் துல்லியமாக எடை போட்டிருந்தான் என்பது முற்றிலும் உண்மை என்றாலும், இராமன் மனத்திலே ஒரு சிறு நெருடல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மரவுரி தரித்து வந்த பரதன் எவ்வளவு சொல்லியும், அந்த அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அப்படிச் சபதம் செய்துவிட்டேன் எனச் சொல்லிவிடுவானோ என அஞ்சிக் கொண்டிருந்தான். அப்படி ஒருவேளை சொல்லியிருந்தால் இராமன் பாடு மிகமிகச் சிக்கலாக முடிந்திருக்கும். தேவர்களும் சொன்னார்கள். இது என் ஆணையாம் என்று இராமனும் கட்டளையிட்டான். அந்த ஆணைக்குக் கீழ்ப்படிந்து 14 ஆண்டுகள் ஆளுகிறேன் என ஒத்துக்கொண்டான். ஆகையினாலே, இராமன் மனத்தில் இருந்த மாபெரும் சங்கடம் அகன்றது. அது நடைபெற்றதனாலே இராமன் எல்லையில்லாத களிப்பில் மூழ்கினான். ஏனென்றால் பரதன் ஒத்துக்கொள்ளவில்லையானால் இராமாவதாரமே அர்த்த மற்றதாகிவிடும். இராவண சம்ஹாரம் நடைபெற்றிருக்க முடியாது. இந்த உலகத்திற்கு அவன் எதற்காக வந்தானோ அதை நிறைவேற்றுதற்குரிய சூழ்நிலை, பரதன் ஆட்சியை ஏற்றுக்கொண்டால்தான் நடைபெறும். ஏற்றுக்கொள்ளமாட்டான் எனப் பயந்து கொண்டிருந்தான் இராகவன். அவன் ஏற்றுக்கொண்டான் என்றவுடனே எல்லையில்லாத களிப்பில் மூழ்கினான். அங்கே களிப்பு என்பது எப்படிப்பட்ட களிப்பு? தன்னலத்தினாலே ஏற்பட்ட களிப்பு அன்று. தான் எதற்காக இந்த உலகத்திடை வந்தானோ அது நிறைவேறுதற்குரிய சூழ்நிலை உருவானதால் களிப்பில் மூழ்கினான் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். (குறிப்பு: எழுப்பப்பட்ட கேள்வி இராமாயண இறுதியை மனங்