பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்
 


நிரூபிக்க வேண்டுமென்று பிராட்டி நினைக்கிறாள். நைஷ்டிக பிரம்மசாரியாகிய அனுமன் அதனுடைய அருமைப்பாட்டினை உணராமல் எங்கே நாலு பேர் இருக்கையில் உளறிவிடுவானோ என்று திருச்செவி சாற்றுவாய்' என்று, காது பக்கத்திலே போய்ச் சொல்லு அப்பா - இது ப்ரிவிலேஜ்ட் கம்யூனிகேஷன் (Privileged Communication) - எனக்கும் என் தலைவனுக்கும். அதை ஏன் உன்கிட்டே சொல்கிறேன் என்றால், அவன் நம்பணும் என்பதற்காகச் சொன்னேன். நீ போய்ப் பத்துப் பேர் இருக்கும்பொழுது உளறித் தொலைக்காதே என்கிறாள். திருச்செவி சாற்றுவாய்' என்றால் இன்றைக்குக் கூட வாய் புதைத்து, காது பக்கத்திலே போய்ச் சொல்லுகிறார்களே அதுபோலச் சொல்லு என்கிறாள். இதனால் பிராட்டியினுடைய எல்லையற்ற அறிவுக்கூர்மையைத் தெரிந்துகொள்கிறோம்.

இதற்கு மாறுபட்ட அடிப்படை ஒன்று இருக்கிறது. பிராட்டியினுடைய அடையாளத்தைச் சொன்ன இராகவன்- தான் மிதிலைக்குள் நுழைந்தபோது மாடியில் அவள் இருந்த அடையாளத்தைச் சொன்னான்.

அவள் மருந்துச் செடிபோலக் காய்ந்து கிடக்கிறாள் காட்டிலே. அப்படித்தானே இலங்கையில் போய் இருக்க முடியும். இப்படிப்பட்ட அடையாளத்தைச் சொல்லாமல் பிராட்டியின் பழைய அடையாளத்தைச் சொல்லப்போக, ஆஞ்சநேயன் அதை நம்பிக்கொண்டு போய் அங்கு ஒவ்வொரு அழகுள்ள பெண்ணாகத் தேடி, மண்டோதரியைக் கூடச் சீதை என்று ஐயப்படுகிற பைத்தியக்காரத் தனத்தைச் செய்கிறான். ஏன்? அது இராமன் செய்த தவறு.