பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



கொள்ளவில்லையே' என்று ஒதுங்கியிருப்பான். பரம கருணையுடையவனாகிய பெருமான் தன்னுடைய துயரத்தை மறந்து தன்னைவிட அதிகம் துயரம் அடைந் திருக்கிறானே இவன் என நினைக்கும்போது அவனுக்கு ஆறுதலாக இந்த முடிவை எடுத்துவிடுகிறான்.

13. இராமன் புகழ்பட வந்த கம்பன், இராவணன், இந்திரஜித் ஆகியவர்களையும் புகழ்கிறானே, இதற்குக் காரணம் என்ன?

இது எல்லாக் காப்பியப் புலவர்களும் கையாளுகின்ற ஒரு வழி. எதிரியை எவ்வளவுக்கெவ்வளவு புகழ்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அந்தப் புகழ் எல்லாம் இங்கே வந்து சேரும். அதில் ஒன்றும் தவறு இல்லை. சாதாரணமாக எலியை அடித்தான் இராமன் என்று சொன்னால் இதில் என்ன பெருமை இருக்கிறது!

வில்லாளரை எண்ணில் விரற்குமுன் நிற்கும் வீரன் (8006) ஆகிய இந்திரஜித்தனைப் போன்ற - அத்தனை பலங்களைப் பெற்றிருக்கிற இராவணனைப் போன்ற வீரனை வென்றான் ஒருவன். இது பெருமை என்றால் கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவன் என்று சொல்லிவிட்டு ஐம்பதாயிரம் குரங்குகளைக் கூட்டிக் கொண்டு போனான் என்றால் இவைகளை யெல்லாம் வைத்துக்கொண்டு வெல்லணுமா? இல்லை. எதுவும் செய்ய முடியும். ஆனால் இவர்கள்மாட்டுக் கொண்ட கருணையினால்- தாங்களும் ஏதோ உதவி செய்தமாதிரி திருப்தி. அந்தக் குரங்குகளுக்கு எல்லாம். பெருமானுக்கு நாங்களும் துணையாகப் போனோம் என்ற ஒரு மன அமைதியைக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். ஆகவே எத்தகைய பகைவர்களை வென்றான் என்பதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/24&oldid=480956" இலிருந்து மீள்விக்கப்பட்டது