பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்17



குறிப்பதன் மூலம், அத்தனை புகழும் இங்கே வந்து சேருகிறது என்பது காப்பிய உத்தி. ஆகையினாலே கவிச் சக்கரவர்த்தி அதை அற்புதமாகப் பயன்படுத்துகிறான்.

14. அனுமன் கடலைத் தாண்டுவது, விச்வரூபம் எடுப்பது, சின்னஞ்சிறிய உருவம் கொள்வது போன்ற இவ்வளவு நம்ப முடியாத நிகழ்ச்சிகள் வேண்டுமா? இயற்கை இறந்த நிகழ்ச்சிகளைக் கவிஞர்கள் ஏன் பாடுகிறார்கள்?

இயற்கை இறந்த நிகழ்ச்சி என்பதே ஒரு பொருள் இல்லாத சொல். இயற்கை என்றால் என்ன? நீங்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். நம்முடைய காலத் திலேயே யோகப் பயிற்சியின் மூலம் The power of the mind என்று அமெரிக்காவில் ஒரு நீண்ட படம் எடுத்து டி.வி.யிலே போட்டுக் காட்டினார்கள். மனவலிமையை அறிந்துகொள்வதற்காக ஆர்வாடிஸ்காவில் இருந்தும், பிரிட்டனில் இருந்தும் ஒரு கூட்டம் திபெத்துக்கு வருகிறது. சாதாரணப் பெளத்த துறவிகள் எத்தனை மாபெரும் செயல்களைச் செய்கிறார்கள் என்பதனை வீடியோப் படமாகக்கூட எடுத்து வைத்திருக்கிறார்கள். மாபெரும் வீரர்கள், ஒரு கையை நீட்டி அத்தனை பேரையும் வென்றுவிடுவார்கள். அவர்களை ஒன்றுமே பண்ண முடியவில்லை. அடுத்த படியாகப் பனிக்கட்டியிலே வெற்றுடம்போடு போய் உட்காருகிறார்கள். ஒண்ணுமே பண்ணவில்லை. இ.ஸி.ஜி. (BCG) எடுக்கிறார்கள். திடீரென்று ஃப்ளாட்டாக வருகிறது. அந்தப் படத்தைப் போட்டுக் காண்பிக்கிறார்கள். ஹார்ட் நின்று போச்சு- இதுவும் நடக்கிறது. B/P பார்க்கிறார்கள். 120/90 திடீரென்று 230க்கு உயர்கிறது. இதெல்லாம் இன்றைக்கும் நடக்கிறது. இயற்கை இறந்தது என்று ஒன்றும் கிடையாது. மனிதனுடைய ஆற்றல்- நீங்கள்

அ.ச.ஞா.ப-2