பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



complimentary to the other. ஆகையினால் கங்கை வேடன் காளத்திவேடனின் மறுபதிப்பா, காளத்திவேடன் கங்கை வேடனின் மறுபதிப்பா என்ற பிரச்சினை இல்லை.

16. தயரதன் வாய்மை தவறக்கூடாது என்பதை நிறுவக் கைகேயி இரு வரம் கேட்டாள் என்று அவளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஏவா மகவைப் பிரிந்து இன்று எம்போல் இடர் உற்றனை நீ போவாய் அகல்வான்’ என்பதான சாபத்தின் கருவழி மாற்றவே கைகேயி இப்படி வரம் கேட்டாள் என்று சொல்வது இன்னும் சிறப்பல்லவா?

மகனை இழந்த தாய் தந்தையர் மகன் பிரிவால் நீ வீடு பேற்றை அடைவாய் அல்லது இறப்பாய் என்றுதான் சாபம் கொடுத்தார்களே தவிர - பிரிவாகவும் இருக்கலாம்- சாவாகவும் இருக்கலாம். அதைக் கைகேயி நினைந்தாள் என்பதை எப்போதும் ஏற்றுக்கொள்ள நான் தயாராயில்லை.

அதைவிடப் பெரிய கொடுமை- கன்னிகா சுல்கத்தில் அவன் சொல்லிய வார்த்தையை மீறி அவன் இப்போது இராமனுக்குப் பட்டம் கட்டுவது. அதனாலேயே அவன் நரகத்திற்குப் போகவேண்டிய சூழ்நிலை உருவாகும். அதிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டுமென்பதுதான்- தற்காத்துத் தற்கொண்டான் பேணுவது தான்- அவள் கடமை. அந்த முறையில் செய்தாளே தவிர, இராமனுக்குப் பட்டம் கட்டியிருந்தால் அவன் இறந் திருப்பான் என்று நினைப்பதற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை. மகன் இறந்து அந்தத் துயரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் அது பட்டம் கட்டித்தான் இறக்க வேண்டுமென்று எங்கே இருக்கிறது? அதை நான் ஏற்றக்கொள்ளத் தயாராயில்லை.