பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்23



வான்மீகத்தில்கூட இன்றைக்கும் சுந்தரகாண்டத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதைத் தினம் பாராயணம் பண்ணினால் பயனுண்டு என்று நம்புகிறவர்கள், செய் கிறவர்கள் உண்டு. தமிழிலே சுந்தர காண்டம் மிகமிக உயர்ந்தநிலைக்குப் போய்விடுகிறது. இரண்டு பாத்திரங்கள் - ஒன்று ஏவல்கூர் பணி செய்கின்றேன் என்று சொல்லிக்கொள்கிறானே அனுமன், அந்தப் பாத்திரம். மற்றொன்று புருஷகார வைபவத்தின் உறைவிடமாக இருக்கின்ற பிராட்டியின் சிறப்பு. இந்தப் பிராட்டியினுடைய சிறப்பை எப்படி வெளிப்படுத்துவது?

இராமன் சொன்னால் அது அர்த்தமற்றதாகப் போய் விடும். வேறு பாத்திரங்கள் சொன்னால் அது பொருத்தமற்றதாக ஆகிவிடும்.

ஆக, மிக அற்புதமாகக் கம்பன் ஒர் அடிமையை வைத்துப் பிராட்டியின் சிறப்பை இமயமலையின் உச்சிக்குக் கொண்டுசெல்கிறான். அப்படிச் சொல்லுகின்ற அதே நேரத்தில் இவனுடைய சிறப்பும் வெளிப்படுகின்றது.

ஆகவே, இரண்டு பேருடைய சிறப்பையும் ஒன்றுக் கொன்று(background) அடித்தளமாக இட்டு, இரண்டையும் ஈடு இணையற்ற முறையிலே படைத்துக் காட்டுவதற்குச் சுந்தர காண்டத்தை ஒரு கருவியாகக் கொள்கிறான் என்று நினைப்பதிலே தவறு ஒன்றும் இல்லை.

20. சரணாகதியைப் பற்றியும், அறம் வளர்த்தல் பற்றியும், நன்றி பற்றியும், வாய்மை காத்த வள்ளல் என்று தயரதனைப் பற்றியும்- இப்படி எல்லாப் பொருள்களையும் முதல் 5 காண்டங்களிலே ஆறாயிரம் பாடல்களிலே (6058 பாடி முடித்த கம்பன் போர்ச் செய்தியை மட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/31&oldid=480970" இலிருந்து மீள்விக்கப்பட்டது