பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



மறந்துவிட முடியாது. உலகம் போற்றுகின்ற மாபெரும் ஞானியும் தத்துவவாதியுமான சங்கரருக்கும் மண்டலமிச்ரருக்கும் இடையே போராட்டம் நிகழ்கிறது. அந்த வாதப்போருக்கு நடுவராக யார் அமைந்தார் என்பதை நினைத்துப் பார்ப்போமேயானால், பெருமிதம்கொள்ள வேண்டியிருக்கிறது. மண்டலமிஸ்ரரின் மனைவியாகிய சரஸ்வதியேதான் அதற்கு நடுவர். எந்த அளவிலே இந்த நாட்டுக்காரர்கள் பெண்களைப் போற்றினார்கள் என்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சொல்லவே வேண்டியதில்லை. சங்கப் பாடல்களிலே அத்தனை பெண்பாற் புலவர்கள் இருக்கிறார்கள். ஆக, பெண்களுக்கு மதிப்புத் தரவில்லை என்று சொன்னால் அது அத்தனை சரியில்லை. குறிப்பிட்ட சில பாத்திரங் களை எடுத்துக் கொண்டு இந்த வினா எழுப்பப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமாக எடுத்துப் பார்ப்போமேயானால் காப்பியத்திலே குறிப்பிட்ட சில கடமைகளைச் செய்ய வேண்டியவர்கள் ஆகிறார்கள். சில sacrifice (தியாகங்கள்) செய்துதான் தீரவேண்டும் அதை யாரும் மறுக்க முடியாது.

மகாத்மா காந்தி வசதியாக வாழக் கூடியவர். அவர் இல்லறத்தில் வாழ்ந்தாரே தவிர, பிற்காலத்தில் மனைவிக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பகவான் இராமகிருஷ்ணர் அதே மாதிரிதான். ஆகவே இராமகிருஷ்ணர் மனைவிக்குரிய மரியாதை தரவில்லை என்று நினைத்தால் அது தவறு. சில பாத்திரங்கள் சில கடமைகளைச் செய்வதற்காக இறைவனால் படைக்கப்படுகின்றன. அந்தப் பாத்திரங்கள் அந்தக் கடமைகளைச் செய்துகொண்டு போகும்போது