பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்31பாவைப் பாடி வைக்கப் பின்னாலே வருகிறவர் களெல்லாம் அதன் பக்கத்தில் போக வேண்டும் என முயன்றார்கள்.

விருத்தப் பாவினுடைய வீச்சு வெண்பாவுக்கு கிடையாது. அதை மறந்துவிடக் கூடாது. நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு விருத்தப் பாவிலே இருக்கிற வீச்சு வெண்பாவுக்குக் கிடையாது. இப்படியும் பாடலாம் என்றால், அது வேறு சமாச்சாரம்.

புகழேந்தி பாடியது ஒரு நிலை. அவனுக்கு மூலமாக இருந்த கதை நைடதம். விருத்தங்களின் நடை அதிலே இல்லை. புதிதாக வெண்பாவிலே பாடினான். சரியாகப் போய்விட்டது. பின்னாலே வந்தவர்கள் விருத்தப் பாக்களிலே இருந்த இராமாயணத்தை, மகாபாரதத்தை அப்படிப் பண்ணனும் என்று நினைத்தது ஒரு புது முயற்சி. அந்த அளவிலே வரவேற்கலாம். தவறு ஒன்றுமில்லை.

24. உலகம் யாவையும் எனத் தொடங்கும் கம்பருடைய கடவுள் வாழ்த்துப் பாடலிலே, நீங்கலா அன்னவர்க்கே சரண் நாங்களே என்ற முடிவு நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதிலே, நீக்கிலா, நீங்கிலா, நீங்கிலார்- எவர் ஆனவர்க்கே சரண் என்பதாக மூன்று பாடங்கள் காணப்படுகின்றன. கம்பன் கருதியது என்னவாக இருக்கும்?

இது இந்த நாட்டினுடைய அடிப்படைக் கொள்கை பரம்பொருள் ஒன்று உண்டு. அவனுக்குச் சரண் நாங்களே என்று. இது ஏகம் சத்' என்ற கருத்திலிருந்து அப்படியே வருகிறது. ஒருவர் -அந்த ஒருவருக்கு- எல்லா உயிர்களும் சரண் இங்கே நாங்கள் என்றால் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை.