பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



பெற்றுத்தான் இருக்கமுடியும். ஆகவே, வால்மீகி இறையருள் பெற்றுப் பாடினான் என்பதிலே எந்தவித ஐயப்பாடும் இல்லை.

ஆனால், நாகரிகம் வளர வளரச் சாம்ராஜ்யங்கள் தோன்றின; சாம்ராஜ்யங்கள் மறைந்தன. அந்த மாதிரி நிலையிலே வருகின்ற கவிச்சக்கரவர்த்தி தன்னுடைய காலத்திற்கேற்ற முறையிலே தன்னுடைய சமுதாயம் பயன்படக்கூடிய முறையிலே பல கருத்துக்களை இதிலே புகுத்தி- சில பகுதிகளை மாற்றி- சில பகுதிகளைக் குறைத்துப் பாடுகிறான். இது முழு இலக்கியக் காப்பிய மாகும். அந்த முறையில் இது ஈடு இணையற்றதாக அமைந்துவிட்டது என்பதிலே ஐயப்பாடு இல்லை. வால்மீகியினுடைய இராமகாதை பரவியிருந்தது என்பதிலும் ஐயப்பாடு இல்லை. ஆனால், கிழக்காசியா முதலான நாடுகளிலே சென்று பரவிய இராம காதையிலே கம்பனுடைய தாக்கம் மிகமிக அதிகமாக இருக்கிறது. அது ஏன்? வளர்ச்சி அடைந்த நிலையிலே அந்த இராம காதைகள் தோன்றுகின்றன. அந்த மாதிரி இடங்களிலே முழுவளர்ச்சி பெற்ற கம்பனுடைய காப்பியம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதிலே எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.

இன்றைக்கு அதைக் கதை என்ற அளவில்மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் காப்பியத்தை எப்படிக் கொண்டு செலுத்துகிறான். இந்தச் சமுதாயம் 9 ஆம் நூற்றாண்டிலே இருந்த நிலை, அதற்கு முன்னால் இருந்த நிலை, அல்லது பின்னாலே வளரப்போகிற நிலை, வளர்ந்தால் அதிகாரம் கைக்கு வந்தால் என்ன செய்யவேண்டும் என்பது அனைத்தையும் பார்க்கலாம். நினைத்துக்கூட உங்களாலே பார்க்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/42&oldid=480985" இலிருந்து மீள்விக்கப்பட்டது