பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்35அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்

பெறல் அருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிது ஆம்

இது கம்பனுடைய வாக்கு.

பவர் கரப்ட்ஸ்-அப்ஸல்யூட் பவர் கரப்ட்ஸ் அப்ஸலூட்லி (Power corrupts. Absolute power corrupts absolutely) இது வாக்கு. இதைக் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவ்வளவு அனுபவம் பெற்றவர் சொல்கிறார் பவர் கரப்ட்ஸ் என்று.

இதைப் போகிற போக்கில் சொல்லிப் போகிறான் கவிச்சக்கரவர்த்தி. அவன் காலத்திலே அவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் இல்லை. பல்லவர்கள் வீழ்ச்சி அடைந்து விட்டார்கள். சோழர்கள் வரவில்லை. அப்படி இருக்கையில் எப்படிப் பாடினான்? வருவது நோக்குகின்ற-எதிரது நோக்குகின்ற பேராற்றல் படைத்தவனாகிய கவிஞன் இப்படி ஒரு சாம்ராஜ்யம் வருமேயானால் அதில் இந்தக் குறை வரத்தான் செய்யும் என்று எச்சரிக்கை செய்கின்ற முறையில்,

அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும்

பெறல் அருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்

ஜாக்கிரதை என்று பாடுகிறான். அதேபோலச் சுக்கிரீவனுக்கு அறவுரை பகர்கின்றான் இராமன். சாதாரணச் சொல்லில் அவனைப் போகச் சொல்லிவிட்டு அனுமனைக் கூப்பிட்டுச் சொல்கிறான். அந்தப் பாட்டுக்குத் தற்குறிப்பேற்றம் மாதிரி பொருள் எழுதுகிறார்கள்.

நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு’ என்று சொல்லுவான். ஒரு நாட்டை ஒருவன் நிறை அரசு காத்தான். இப்பொழுது இன்னொருத்தன் அந்த நாட்டை