பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



விடுங்கள். அதைப் பற்றிக் கவலையே இல்லை. அவன் சொல்லிய கருத்துக்களை யெல்லாம் தொகுத்துக் கம்பன் கண்ட அரசியல் என்று சொல்வீர்களேயானால்-மாடர்ன் க்வாலிடி (modern quality) என்று சொல்லுவார்களே-அதற்கு இந்த நூற்றாண்டு மட்டுமல்ல வருகின்ற நூற்றாண்டும் வணக்கம் செலுத்துகின்ற முறையிலே அரசியல் அமைப்பை அமைத்துவிடுகிறான்.

இதை யெல்லாம் நினைந்து பார்க்கும்போது நம் முடைய மூதாதையாகிய கம்பன் நமக்குமட்டும் இந்த நூலை இயற்றித் தரவில்லை. மனித சமுதாயம் அனைத்திற்கும் எந்தக் காலத்திலும் அவர்கள் வாழும்போது எத்தகைய வளர்ந்த நாகரிகத்தை அடைந்தாலும், சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் அப்போது இராமகாதையை எடுத்துப் படிப்பார்களேயானால் அது அவர்களுக்கு உதவும். கதை பழையதாக இருக்கலாம். ஆனால் அன்றாடம் அவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய பல அடிப்படைச் சூழ்நிலைகள் அங்கே விளக்கப் பட்டிருக்கின்றன என்பதை நினைக்கும்போது, வள்ளுவனுடைய குறளைப் போல இதுவும் உலகம் முழு வதற்கும் பொதுவான அறநூல் என்பதை உணரலாம்.

காப்பியம் என்று சொல்வதைவிட அறநூல் என்றே தெளிவாகச் சொல்ல முடியும் என்னால், அப்படிப்பட்ட அறநூலை ஆக்கித் தந்தான் கம்பன். அந்த அறநூலிலே அன்பர்கள் பல்வேறு விதமான வினாக்களை எழுப்புவதன் மூலம் அவர்களோடு சேர்ந்து நாம் அனைவரும் சிந்திக்கின்ற ஒரு வாய்ப்பைத் தந்தார்கள்.

(28.10.1995- கோவை வானொலி நிகழ்ச்சியில் சுவைஞர்கள் எழுப்பிய வினாக்களும், அவற்றுக்கு அ.ச.ஞா. தந்த விடைகளும்.)