பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்41



எழுதினார்கள். திறனாம்! ஆய்வாம்!! அருமையான விமர்சனம் என்ற வார்த்தை இருக்கின்றபோது ஏன் இந்த அச. இப்போது புதிதாக ஒரு வார்த்தையை உண்டாக்கி நம்ம பிராணனை வாங்குகிறார் என்று எழுதினாங்க. அப்புறம் 10 வருஷம் கழித்து வாசன் என்கிட்ட வரும் பொழுது அவர்கள் பத்திரிகையிலேயே திறனாய்வு என்று எழுத ஆரம்பிச்சுட்டாங்க. என்னை வாசன் அப்படிக் கலாட்டா பண்ணினார். இப்ப விமர்சனம்ன்னு எழுதுனா ஆனந்த விகடனைக் கொளுத்திப்புடுவான், ஆகவே திறனாய்வுன்னு எடுத்துக்கிட்டோம் என்றார். அப்படி ஒரு ஆக்ஸிடெண்டலா வந்ததே தவிர நான் அதைத் தேடிப் போனேன் என்று சொல்வது முறையல்ல.

26. அப்புறம், அய்யா, இலக்கணத் திறனாய்வு, இலக்கண விமர்சனம், தமிழிலே மரபா இருக்கக்கூடிய உரை எழுதுவது- இவை மூன்றுக்கும் என்ன வித்தியாசம், என்ன ஒருமைப்பாடு? நீங்க என்ன பார்த்தீங்க?

இப்போது உரை என்று சொல்வது commentary என்பதைத்தான். வேறே. எந்த உலக இலக்கியத்திலேயும் இந்த மாதிரி கிடையாது. இப்போது எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதற்கு விளக்க உரை- கமண்ட்ரி எழுதுவது இந்த நாட்டிலேதான். ஹோமர் எழுதினாலும் 'கமண்ட்ரி கிடையாது. டாண்டே எழுதினாலும் 'கமண்ட்ரி கிடையாது. திறனாய்வாளர்கள் சில பகுதிகளை எடுத்து வைத்துக் கொண்டு இது எந்த வகையிலே சிறந்திருக்கிறது, காப்பிய கட்டுக் கோப்புகளுக்கு எப்படிப் பொருத்தமாக இருக்கிறது. என்று சொன்னார்களே தவிர, வரிசையாகப் பாடல்களை எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு விளக்க உரை எழுதி வருவது என்பது தமிழ் மரபில்தான் உண்டு. வடமொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/49&oldid=481138" இலிருந்து மீள்விக்கப்பட்டது