பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்43தொல்காப்பியத்தில். அப்படி மறுக்கின்ற போதுகூட மிகக் கெளரவமான முறையிலேதான், இதை இப்படித்தான் கொள்ளவேண்டும் என்று சொன்னார்களே தவிர, வேறு ஒன்றும் இல்லை. மிச்சம் வருகிற எல்லாமே அப்படியே 'அப்பிரிசியேடிவ் கிரிடிசிஸம்’னு சொல்லுகின்ற முறையிலே போற்றுமுறைத் திறனாய்வாத்தான் பண்ணியிருக்கிறார்கள் இல்லையென்று சொல்வதற்கு இல்லை.

27. உரைகளிலே இலக்கணம் சார்ந்த சில குறிப்புகள் வருது. இப்ப மேலைநாடுகளிலே அந்த மாதிரி இலக்கணக் குறிப்புகள்...?

கிடையாது. காரணம்- ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தமிழ்மொழியைப் பொறுத்தமட்டிலே ஒரு தனிச்சிறப்பு. தொல்காப்பியன், எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று சொன்னான். அற்புதமான ஒரு விளக்கம். பொருள் குறித்தன என்றால் It implies that அவ்வளவுதான். It symbolises that என்று சொல்லுகிறோமே! அதுபோல. அதற்குமேல் அந்தச் சொல்லுக்குப் பொருள் கிடையாது. பொருளாகப் பெரியவர்கள் வைத்தார்கள். அதனால் பொருள் குறித்தன என்ற சொல் இதைத்தான் குறிக்கும் என்று பெரியோர்களெல்லாம் முடிவு என்று ஒத்துக்கிட்டார்கள்.

28. அனுமானம்னு சொல்லலாங்களா?

அல்ல. அனுமானம் என்று சொல்லமுடியாது. ஏதோ ஒரு காரணத்தினாலே முதலில் பெயரிட்டார்கள். அப்புறம் நன்னூல்காரர் காலத்திலேதான் அந்த வேறு பாட்டைப் பிரித்தார்கள். தொல்காப்பியன் காணாத வேறுபாடு. இடுகுறிப் பெயர், காரணப்பெயர் என்று