பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்இரண்டாகப் பிரித்தது. இந்தப் பெயர்கள் காரணத்தைப் பற்றி வந்தது காரணமில்லாம வந்தது என்று பிரித்தது. மரம் என்றால் அது இடுகுறிப் பொதுப் பெயர். பனை மரங்கிறது அந்த மரத்துல ஒரு பிராஞ்ச், ஒரு தொகுதி. இடுகுறிச் சிறப்புப் பெயர். காரணம் கருதியபோது அது ஒரு குறிப்பிட்ட ஒன்றினையும், காரணம் கருதாதபோது அது எல்லாவற்றையும் குறிக்கும். முக்கண்ணன் என்றார்கள். சிவபெருமானுக்கு முக்கண் உள்ளது. விநாயகருக்கும் முக்கண் உள்ளது. முக்கண்ணன் என்று சொன்னால், அது சிவபெருமானைத்தான் குறிக்கும்- காரணம் கருதாதபோது. காரணம் கருதி முக்கண்ணுடை விநாயகர் என்று சொன்னால் அப்பொழுது அவரைக் குறிக்கும். அதேபோல் வேறுபாடுகள் வளர வளர மொழி வளர்ச்சி ஒரு காலத்திலே ஒரு பொருள் குறித்த ஒரு சொல் பல பொருள் குறித்த ஒரு சொல் ஆக மாறிற்று என்று தொல்காப்பியன் ஒத்துக்கொள்கிறான். அவன் காலத்திலேயே தமிழ் ஒரு highly developed language. ஆகையினாலே, ஒரே சொல் பல பொருளைக் குறிப்பதும் பல சொல் ஒரு பொருளைக் குறிப்பதும் வந்துவிட்டது. அப்படியானால் இதை வைச்சிக்கிட்டுக் கவிஞன் என்ன பண்ணினான்? இப்ப Mathew Arnold comes to our aid. Best word in the best order என்று சொன்னான். சிறந்த சொல்லை எடுத்து அமைக்க அந்தக் கவிதைக்கு... எல்லாருமே கவிதை பாடுகிறான். ஏதோ தனக்குத் தெரிந்ததைச் சொல்லப்போறான். ஆனால், அதற்குச் சிறந்த சொல்லைப் பொறுக்கிச் சிறந்த முறையிலே அடுக்குகிறான். Juxtaposition-னு சொல்லுகிறோமில்லையா, அதுதான். அதனாலே தமிழ்க் கவிதைக்கு ஒரு சிறப்பு ஏற்பட்டுள்ளது. -