பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள் 45

29.தொல்காப்பியத்திலேயே எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று சொல்லப்படுகிறது என்று சொல்லு கிறார்களே, அய்யா.

ஆமாம்.

30. இலக்குவனார் வந்து வெறும் அர்த்தமானதாப் புரிஞ்சுக் கிடனும்னுங்கிற மாதிரி எழுதியிருக்கிறாரே, அதாவது ஆங்கிலத்திலே மொழிபெயர்க்கும் பொழுது, பொருள்-meaning அப்படி என்று எழுதியிருக்காரு. அப்படி என்றால் meaning-னு எடுத்துக்கிறதா அல்லது significance-னு எடுத்துக்கிறதா?

பொருள் என்று சொல்ல முடியாது.

31.குறித்தல்...

குறித்தல் என்று சொல்ல முடியாது. Signifies என்று கொள்ளலாம். இந்தச் சொல்லைச் சொன்னவுடனேயே அந்தப் பொருள் படிப்பவன் மனசுக்குள்ள படவேண்டும். அவ்வளவுதான்.

32.அய்யா, அடுத்தது. மேற்கத்திய இலக்கியத்தின் திறனாய்வு அளவுகோல் என்ன? தமிழைப் பிரத்யேகமாகப் புதிதாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு அது எவ்வாறு உதவியது?

அது வந்து... பேருதவி பண்ணியது. இல்லை என்று சொல்வதற்கு இல்லை. அதற்கு முன்னால தனிப் பாடலோ, காப்பியமோ அல்லது தொடர்நிலைச் செய்யுளோ, நாம் பார்க்கிற பார்வை வேறாக இருக்க வேண்டும். அதுவரையில் அந்தப் பொருளைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கணும். இப்ப, தொடர்நிலைச் செய்யுள் கம்பராமாயணம் போல- பதினாயிரக்கணக்காக