பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



இதில் வந்த பாடல்களைக்கூடக் கதைத் தொடர்பு, சொல்லமைதி, கற்பனை வளம், இயற்கை என்பதைத்தான் பார்த்தோமே தவிர, இத்தனையும் சேர்ந்து கம்பன் என்கிற கட்டுக் கோப்பு இருக்கிறது அல்லவா? அதை யாரும் கவனிக்கவில்லை; அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அந்த Structure இருக்கிறது அல்லவா? காப்பியத்தினுடைய வடிவமைப்பு. அதை முதன் முதல்ல orchitectonics என்கிற ஹெட்டிங்ல பண்ணியவர் வ.வெ.சு. அய்யர். அவருக்குக் கிரேக்க லிட்டரேச்சரைப் படித்துவிட்டு ஹோமரையெல்லாம் படிச்ச காரணத்தினாலே, கம்பனுடைய காப்பியக் கட்டுக்கோப்பு எப்படியெல்லாம் நெளிவு சுளிவுகளோடு இருக்கிறது என்று எழுதினவர் அவர்தான். அதற்கப்புறம், பலர் அந்த வழியில் போக ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கும் அந்த மேலை நாட்டுக் கிரிட்டிசிஸத்தில் இப்படி முழுசாக வைச்சுப் பார்க்க முடிந்தது. ஆர்கிட்டானிக்ஸ் அல்லது ஸ்ட்ரக்சர். துண்டு துண்டா எடுத்துப் பார்க்கிறது, ஒரு பாத்திரம். அந்தப் பாத்திரத்தினுடைய ஒரு சொல் அல்லது ஒரு செயல். இந்த ஒரு சொல்லையோ அல்லது ஒரு செயலையோ எப்படிக் கவிஞன் விளக்குகிறான் அல்லது சொல்கிறான் என்பதை நோக்குவது மற்றொன்று. இதுமாதிரி வரும் பொழுது முழுவதை மறந்துவிடுகிறோம். நீல மாலை'ங்கிற ஒரு கேரக்டர் என்று எடுத்துக்கிட்டீங் கன்னா, அதில உள்ளதே ஒன்றரை வரிப்பாட்டுத் தான். அது ஒன்றரை வரிப்பாட்டிலே சொல்ல வேண்டியதற்கு ஒரு முழு வடிவம் கொடுத்துவிடுகிறான். அவ்வளவுதான். அதான் காப்பியப் புலவனுடைய ஒரு சிறப்பு. ஒன்றரை வரியில் வருகிற ஒரு கேரக்டரை, மைனர் கேரக்டர் என தள்ளுவதே இல்லை. A minor character retains the form of

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/54&oldid=481538" இலிருந்து மீள்விக்கப்பட்டது