பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்47



a full character. அதுதான் கம்பனுடைய தனித்தன்மை. ஒன்றரை வரிப்பாட்டில் வந்துவிட்டுப் போகிறவர்களுக்கும் அந்த ஒரு மரியாதை இருக்கும்; அது ஒரு முழு வடிவாக இருக்கும். இங்கே யாரும் கவனிக்கவில்லை. இங்கே மேலை நாட்டுத் திறனாய்வைப் படிச்சதினாலே எனக்கு அந்தப் பார்வை அப்படிப் போயிற்று.

33. குறிப்பாக, epic poetry-ல நீங்க ரொம்ப ஆழமாப் போயிருக்கீங்க.

ஆமாம். Epic poetryதான். மற்ற poetry என்றால் ஒவ்வொரு துண்டு துண்டாக இருக்கும். ஒரு பகுதியைத்தான் பார்க்கிறார்கள். ஒரு கவிஞனுடைய முழு விஸ்தீரணத்தையும், ஆழத்தையும் அவனுடைய "ஸ்வீப்பையும் பார்க்க வேண்டுமென்றால் அவனுடைய காப்பியம்தான் லாயக்கு. இப்ப இந்தக் கருத்தோட பார்க்கும்போதுதான் கம்பனுடைய படைப்பு, சேக்கிழாருடைய படைப்பு: திருத்தக்க தேவருடைய படைப்புக்களை புதுக் கண்ணோட்டத்தோடு பார்க்க முடிந்தது. இப்படி இந்த வடிவத்தை அதுக்கு முன்னால் தனி மரமாகப் பார்த்துக்கிட்டே இருந்தோம்.

34. சங்க இலக்கியத்தைப்பற்றி எவ்வாறு, எப்படி நினைக் கிறீர்கள்?

சங்க இலக்கியத்தைப் பற்றி, இப்போது ஒரு குறிப்பிட்ட துறை, திணை எடுத்துக் கொள்கிறோம். அகம் இருக்கிறது அதில் 5 திணை இருக்கிறது. தனித்தனி poem ஆக எடுத்துப்பார்த்தீர்கள் என்றால், ஒன்று குறிஞ்சி, முல்லை, மருதம்னு அதற்குள்ள முதல் கரு உரி இருக்கிறதா என்று பார்த்து, அவ்வளவுதான் என்று விட்டுட்டோம். அந்தக் கவிதை என்ன சொல்கிறது என்பதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/55&oldid=481542" இலிருந்து மீள்விக்கப்பட்டது