பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



காணவேண்டும். நச்சினார்க்கினியர் கூட "இந்தக் காரணத்தினாலே இதைச் சொல்லியிருக்கிறதனாலே, அது இந்தத் திணையாயிற்று, இந்த விளக்கத்தை சொல்லியிருக்கிறது. இந்த இயற்கை வர்ணனை இருக்கிறது" என்று சொன்னானே தவிர, அந்தக் கவிதையை முழுவதுமா வைத்து என்ன கூறிற்று என்று சொல்லவில்லை. இந்தக் குறை நச்சினார்க்கினியர்கிட்ட ஆரம்பிக்கவில்லை. வியாக்யான கர்த்தாக்கள் கிட்ட ஆரம்பித்துவிட்டது. சொன்னால் சண்டைக்கு வருவார்கள். அற்புதமான அறிவாளிகள். மறுக்க முடியாது. ஆனால், ஒரு கவிதையினுடைய ஒரு அடியை எடுத்து அந்தச் சொல்லைப் பிரிச்சு எத்தனை எத்தனை விதமா அதற்குப் பொருள் காணமுடியும் என்று அதற்குப் போய் விட்டார்கள். அது அறிவுக்கு விருந்து, கவிதை அறிவுக்கு மட்டும் விருந்தல்ல, கவிதையினுடைய உயிர்நாடி உணர்வு.

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்

மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்

துயாறு சுடர்அடி தொழுதெழுஎன் மனனே"


இந்தக் கவிதையை நம்மாழ்வார் பாடும்போது என்ன 'பாவத்தை கொண்டு வருகிறார். நம்மை அறியாமல் அப்படியே உயர்வற உயர்நலம் உடையவன் என்ற வுடனேயே, அதற்கு நான் எழுதியிருக்கிறேன். மில்டனுடைய பாரடைஸ் லாஸ்ட்டுக்கு ஒரு திறனாய்வு எழுதும்பொழுது சொன்னேன். அதில் சாத்தானுடைய முடி அசைந்தது. அதிலிருந்து இறக்கை, கோழி இறகு கீழே விழுகிறதாம். அதை “and fell, and fell, and fell and

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/56&oldid=481545" இலிருந்து மீள்விக்கப்பட்டது