பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்49fell என்று 4 fell போட்டு ஒரு லைன். இதற்கு நான் விளக்கம் எழுதினேன். என்ன பெற வைக்கிறான் கவிஞன்! அப்படியே அதில் ஈடுபட்டிருக்கிறான்! சாத்தானை அண்ணாந்து பார்த்துக்கிட்டு. அவன் தலை ஆட்டம் கண்டு போனவுடனே அந்த முடி கீழே விழுந்து, அது விழ விழ நம்மை அறியாமல் கீழே பார்க்கிறோம். அந்தப் பார்வை மேலேயிருந்து கீழே வருகிறது. நமக்கு அதைப் பெற வைத்துவிட்டான், and tell and fell என்று சொல்லும்போது. விழுந்தது நாம நினைக்கல; நம்ம கண்ணுல ஏதோ விழுந்துகிட்டு இருக்கிறது என்று நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த மாதிரி, உயர்வற உயர்நலம் உடையவன் எவன்- அந்த உயர் என்றால் என்ன? அற என்றால் என்ன என்று விளக்கம் எழுதவில்லை. இந்தப் பாட்டு முழுவதும் என்ன ஒரு உணர்ச்சியை உண்டு பண்ணுகிறது என்கிற விளக்கத்தை விளக்கமாக எழுதுகிறார்கள். நச்சினார்க்கினியர், பேராசிரியர் என்ன சொன்னாங்க சொல்லை எடுத்து, சொல்லைப் பிரித்துச் சொல்லுக்குப் பொருள். அந்தச் சொல் அடைவு இருக்கிறதே, கற்பனை வளத்தை எப்படிக் கொண்டு வருவது என்று பார்த்தார்களே தவிர, தோப்பை அனுபவிக்க மறந்தார்கள். தனி மரத்தை அற்புதமாக விளக்கிவிடுவார்கள், மறுக்க முடியாது. இந்த மரமெல்லாம் கூடிய தோப்பு இருக்கிறதே. அதைப் பார்க்கவில்லை. அது தமிழில் ஒரு குறைதான். அதை முதன்முதலில் அந்தப் பார்வையைப் பார்க்கணும்னு சொன்னவர் வ.வெ.சு. அய்யர்தான். அதற்கு அப்புறம் of course நிறைய பேர் இதைச் செய்திருக்கிறார்கள். எனக்கு இந்த ஆங்கிலப் பார்வை வந்தவுடன் நான் முதல்ல இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் எழுதும் அ.ச.ஞா.ப-4