பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்
 


போது வ.வெ.சு. அய்யரைப் படிக்காமல்தான் எழுதினேன். படிக்கக் கூடாதுன்னு நினைத்தேன். என் மனத்திலே ஒரு பாடம் பண்ணிட்டேன். இராவணன் anti hero என்பதைக் கம்பன் எப்படி டெவலப் பண்ணியிருக்கான் என்பதை எழுதியிருக்கிறேன். 'இராவணன் வீழ்ச்சி என்று ஒரு சேப்டர் எழுதியிருக்கேன். இறப்பது எல்லோருக்கும் சகஜம். எத்தனையோ பேர் மாண்டனர் அதில் இவன் ஒருத்தன். அதில் என்ன வந்திருக்கு பெரிய பெருமை இவனுக்கு! not because of death – செத்ததற்காகக் கவலைப் படல, அதோட எத்தனை நற்பண்புகள் கீழே விழுந்தன. இந்த ஒருத்தன் வீழ்வதில்-நற்பண்புகள், ஒரு நூறு இருக்குது. நூறும் சேர்ந்து வீழ்ந்தன. அதுதான் tragedy ராஜா செத்தான் என்றால் nobody bother அவன் மனைவி பிள்ளைகளுக்குத்தான் கவலை. ஆனால் ஒரு மகாத்மா காந்தி செத்தார் என்றால் உலகம் முழுவ்தும் அழுகின்றது. ஏனென்றால் so much of ஒரு பண்பு, அந்தப் பண்பு கீழே வீழ்ந்தது. பண்பு இல்லாத எனக்கு அதைப் பற்றிக் கவலை கிடையாது. அதுதான் ட்ராஜடி.

இதைப் பண்ணனும்னு நினைச்சவுடனே வ.வெ.சு. அய்யரைப் பார்க்கணும்' என்று சா. கணேசன் சொன்னார். நான் பார்க்க மாட்டேன்னு சொன்னேன். ஏன் என்று கேட்டார்.

He may mislead me. அது ஆதியிலே என் தகப்பனார் என்னை உரை படிக்காம பழக்கினாரே அந்த அந்த மாதிரிப் பழக்கம்.

I will have my own view; அப்புறம் படிச்சுக்கிடலாம்.