பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்51



35. நீங்க சொன்ன மாதிரி ஒரு மனிதன் விழும்போது, அந்த அவலம்-கிறது...?

அந்தச் சொல்லை, அவலம்-கிற சொல்லை நான் தான் உருவாக்கினேன். Tragedy என்ற சொல்லுக்கு அவலம் என்று போட்டது நான்தான்.

36. அப்ப மொத்தமா எல்லாத்தையும் சேர்த்துச் சொல்றீங்களா?

எல்லாம் சேர்த்தல்ல. அவனுடைய நற்பண்புகள்.

37. நீங்க சிலப்பதிகாரத்தைப் பத்தியும் எழுதியிருக்கிங்க. சிலப்பதிகாரத்திலே கோவலனுடைய வீழ்ச்சி வந்து tragedy-னு எழுதியிருக்கீங்க.

ஆமாம்.

38. Tragedy-னு எப்படி சொல்றீங்க.

அதுல காட்டியிருக்கேனே. "கடக்களிறு அடக்கிய கருணை மறவ!

ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து

நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ

பற்றிய கிளைஞரிற் பசிப்பிணி அறுத்துப்

பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்!

இம்மைச் செய்தன யானறி நல்வினை"

போதாதா?

39. அத்தனை பண்புகளும் இருந்ததுன்னு சொல்றீங்க?

ஆமாம், வழியில போகின்ற-பார்ப்பான் சொல்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/59&oldid=481554" இலிருந்து மீள்விக்கப்பட்டது