பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 பேசிய பேச்சை எடுத்து எழுதினால் எழுத்து நடை யாகவே அமைவது ஒரு வகை; பெரிதும் பேச்சு நடையாயினும் எழுத்து நடையை நினைவூட்டுவது இன்னொரு வகை. இந்த நூலில் மூன்றாவதாக வேறொரு வகை. பேச்சொலியை எழுத்தொலியாகப் பதிவு செய்வது இது.

பல இடங்களில்... இந்த மாதிரியான புள்ளிகள் இருக்கும். நேரில் கேட்கும்போது சொல்லப்படாத வார்த்தைகள் கேட்பவர்க்குப் புலப்பட்டுவிடும். எழுத்து வடிவில் கொடுக்கும்போது விடுபட்ட சொற்களைப் பெய்து எழுதினால் பேச்சு ஒலிக்கும் எழுத்து வடிவுக்கும் வேறுபாடு தெரியாது. அப்படிச் செய்வதற்கு ஆசிரியரின் ஒப்புதல் வேண்டும். பேராசிரியர் அவர்களின் ஒப்புதலும் பார்வையும் பெறுவதற்கு இப்போது வழி இல்லை. ஆதலால் மூன்றாவது பகுதி தவிர, முதல் இரண்டு பகுதிகளும் ஒலிநாடாவையே நம்பி வெளியிடப் பட்டுள்ளன. அ.சஞா.வின் ஆளுமையின் ஒரு வகையைத் தெரிந்துகொள்வதற்கு உதவுமெனக் கருதி, அப்படியே வெளியிடுகிறோம்.

முதற் பகுதி வினா-விடையாக அமைகிறது. இரண்டாம் பகுதி விவாதமாக அமைகிறது. மூன்றாம் பகுதி பெரிய புராணம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பேரா. அ.ச.ஞா. தந்த விடைகள்- இதழில் வெளி வந்தபடியே அச்சிடப்பட்டுள்ளன. (இந்த மூன்றாம் பகுதி மட்டும் அ.ச.ஞா. நம்மிடையே இருந்தபோது வெளி வந்தது)

சில இடங்கள் விளங்கவில்லை. அ.ச.ஞா.வின் விளக்கம் கேட்கவும் வழியில்லை. ‘இப்படித்தான்