பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்53வருகிறது. மலையிலே ஏறி நிற்கும்போது. ஒரு முலை இழந்த திருமா பத்தினி நீ யார்னு கேட்கிறார்கள், அந்தக் குறவர்கள். அப்போது மதுரையோடு அரசு கேடுற வந்த தீவினையேன் நான் என்று சொல்கிறாள் அவள். அது எந்த ’சாலிலக்கி’ implied communication என்பதற்கு எதிரில் ஆள் இல்லாமல் இருக்கவேண்டும். அப்போது தான் 'சாலி லக்கி என்று பெயர்... that is implied communication. No communication here. அவள் தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள். கம்யூனிகேஷன் வரும் பொழுது எதிரில் குறவர்கள் நிற்கின்றார்கள். ஆகவே, அதில் சாலிலக்கி கிடையாது. மதுரையோடு, அரசு கேடுற வந்த தீவினையேன் நான் என்று சொல்லும்போது, there are people standing there சாலிலக்கி பெரும்பாலும் எங்கே வருகின்றது என்றால், அகப்பாடல்களில் வரும். தலைவியைப் பற்றி நினைத்துத் தன்னுடைய மனத்திற்குச் சொல்கிறான். அவள் காத்துக் கிடப்பாள்.

செந்தார் பைங்கிளி முன்கை ஏந்தி

இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து'

என்று கிளியிடம் பேசி வேதனைப் படுவாளே என்று தலைவன் பேசுகிறான். அவ கையில கிளி வைத்து இருக்கிறாளோ, கையில சிறங்கு வந்துருச்சுன்னோ தெரியாது. செந்தார் பைங்கிளி முன் கையேந்தி இன்று 'வரல் உரையோ சென்றிசினோர் திறத்தென’ - சொல்லுவாள் என்று அவள்கிட்டப் போக விரைந்து செல்லும் நெஞ்சே என்று சொல்றானே அது 'சாலிலக்கி. அதைக்கூட avoid பண்ணிவிடுகிறார்கள். பெரும்பாலும் தோழனுடன் சொல்லியது போல்தான் இருக்கும். அப்படியும் இல்லாமல் சில பாடல்கள் இருக்கின்றன. அவை ரியல் - சாலிலக்கி"