பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்57மோனையோடு இருக்கும். ஆகவே அதை நீங்கள் உடையாது என்று சொல்ல முடியாது. அது தேவாரங்களுக்கும், பிரபந்தங்களுக்கும் உள்ள ஒரு தனிச் சிறப்பு. என்னவென்றால் என்ன ராகம் இருக்கிறது என்று தெரியவில்லை, இதுன்னு சொல்றான்; அதுன்னு சொல்றான். நான் தமிழிசைச் சங்கத்திலே சொன்னேன், "சிரமப் படாதே! எந்த ஒரு ராகத்திலே பாடும்பொழுது சொல் உடையாம வருதோ, அதுதான் அதற்குரியது" என்று. எந்த ஒரு ராகத்திலே பாடும்பொழுதும் சொல் உடையாம வரணும். சந்தமார், அகிலொடு சாதிதேக் கம்மரம் - காதிலே கம்மரம்னு பாடுவான். இது மாதிரி வரக்கூடாது. வகையுளி-னு சொல்கிறோமா இல்லையா, அது மாதிரி பிரியாமல் வரவேண்டும். அந்தப் பெரியவர்கள் பாடிய பாட்டெல்லாம், எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல் உடையாது. அதுக்கு ஏற்றபடி ராகம் அமைந்திருக்கும். விருத்தப்பாவாக இருக்கட்டும். அது எதுவாக இருக்கட்டும் கவலையில்லை. சந்தப்பாடல் உட்பட அதுதான் criterion, அந்த criterion வேறு எந்த மொழியிலேயும் பார்க்க முடியாது. சமஸ்கிருதத்துலகூட அந்த மாதிரி பிரேக் உண்டு. அவர்கள் அந்த மாதிரி கருதுவதும் இல்லை; அதைக் குறை என்றும் கருதுவது இல்லை. இவன் அதை ஒரு குறையாகத்தான் கருதி யிருக்கிறான். எவனோ ஒருத்தன் பாடிவிட்டான். அதற்கு ஒரு இலக்கணம் கண்டு பிடித்தானே தவிர, வகையுளி கூடுமானவரை வரக் கூடாது. அதுதான் அந்தப் போக்கு தேன் ஒழுகுவது போலப் போய்க்கொண்டிருக்கிற நடை

52. அகம் புறம் என்ற வகைமைகள் உள்ளதெல்லாம் தமிழிலே. இலக்கியத்திலே வந்து- இப்ப மேல்நாட்டிலே சில இலக்கியத் திறனாய்வுகள், கோட்பாடுகள் வரும்