உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



பொழுது அவர்களுடைய பழைய tradition ஆக இருந்து கொண்டு வந்ததை வளர்க்கிறார்கள். உதாரணத்திற்குத் தமிழிலே அகம் புறம் என்ற வகைப்பாடு, ரொம்ப காலமாகவே தமிழ் இலக்கியத்திலே இருந்து வந்திருக்கிறது. அது நாயக-நாயகி பாவத்திலே கூட இருக்கும். அகப்பாடல்கள் மாதிரி, சமயப் பாடல்கள்கூட அகப் பாடல்கள் போன்ற தன்மைகளோடு வந்துருக்குங்க. அகம் புறம் என்ற இருகோட்பாடுகளை வைத்து தமிழுக்கு பிரத்யேகமா ஒரு திறனாய்வு முறை அல்லது விமர்சன முறை உருவாக்க முடியுமா?

சம்மதம். பண்ணலாம். ஆனால், அது செத்துப் போய் விட்டது. அது 12ஆம் நூற்றாண்டோட போய்விட்டது. அதற்கு அப்புறம் யாரும் பண்ணவில்லை. தொடர்ந்து வந்திருக்குமேயானால் அது நீங்கள் சொல்கிற ஆராய்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கும். இப்போது சங்க கால இலக்கியத்திற்குமட்டும் வைத்து ஒரு தியரி ஆப் லிட்டரேச்சர் பண்னணும்.

53. விமர்சனம்-கிறது தியரி ஆப் லிட்டரேச்சர் - என்று சொல்லலாமா? -

திறனாய்வு வேறே, தியரி ஆப் லிட்ரேச்சர் வேற.

54. அகம்-புறம் கோட்பாடு...?

இந்த மாதிரி வருகிறதும், ’கிரிட்டிசிஸத்துல’ ஒரு பகுதி. திறனாய்வுல ஒரு பகுதிதான் அது. ஆனால் அது ஏன் செய்யவில்லை என்றால், அது என்றைக்கோ போயிடுச்சு, இப்ப அதை யார் இழுத்துப்போட்டுச் செய்து கொண்டிருப்பார்கள்? அதை இப்ப மாணவர்களுக்கு எளிதாகச் சொல்லித் தரவேண்டும். அதுக்கு மேலே வாத்தியாருக்கும் தெரியாது. அப்புறம் சொல்லிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/66&oldid=481635" இலிருந்து மீள்விக்கப்பட்டது