பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்59



கொடுக்க நமக்குக் கஷ்டம். இந்த மாதிரி broad structure அகம்-புறம் குறித்து. இதிலேயிருந்து இலக்கியம் வாழ்வு முறையோடு தொடர்ந்து இருக்கிறது என்று ஒரு பெரிய ஆராய்ச்சி. அதை யாரும் செய்யவில்லை. இனி இதைச் செய்வது தேவை என்று எனக்கும் தோன்றவில்லை. இனி இந்த அகம் வந்து பக்தி இயக்கத்துலகூடப் புகுந்துக்கிறதுனு சொல்கிறார்கள். ரொம்பப் பேரு இந்தத் தவற்றைப் பண்ணிக்கிட்டு இருக்கிறார்கள். அதைப் பக்தி இயக்கம் என்று பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் பேசியிருக்கேன். அதை அப்படியே வைச்சுட்டேன். இன்னும் அச்சுக்குக் கொண்டுவரவில்லை. ஒவ்வொரு தடவையும் எடுக்கும் போது idea வருவதால் சரின்னு வைச்சிடரேன். இந்த ஒன்றை ரொம்ப சிந்திச்சு வைச்சிருக்கேன். எப்படி வந்தது. இந்த அகப்பாடல் பக்தி இயக்கத்திலே? பாடுவது மூன்று வயதுப் பையன். மூன்று வயதுப் பையன் உள்ளம் கவர் கள்வன்-னு பாடினால் அது வந்து juvenile delinquency என்று அர்த்தம்

55. திருஞானசம்பந்தர் மாதிரி...

ஆக, என்ன கருத்து. அகத்துக்கு என்ன அர்த்தம் பண்ணுனாங்கன்னு இருக்கு. அப்ப அகத்துக்கு என்ன அர்த்தம் கண்டுபுடிச்சாங்கன்னு தெரியல. இப்ப அகம்னு சொன்னா, புருஷன் பொண்டாட்டி-ங்கிற அர்த்தத்துக்கு வந்துட்டோம். அது இல்லை. வள்ளுவன் எச்சரிக்கை பண்ணிட்டான். கடைசியாக வந்தவன் அவன்,

சங்க இலக்கியத்திற்குப் பின்னால் 'மலரினும் மெல்லிது காமம் என்று கூறினான். It is a mental status. அவன்தான் சொன்னான். காமம் என்பது சங்க காலத்திலே இருக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/67&oldid=481572" இலிருந்து மீள்விக்கப்பட்டது