பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



காமம் காமம் என்ப; காமம்

அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக்

கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை

குளகு மென்று ஆள்மதம் போலப்

பாணியும் உடைத்து அது கானுநர்ப் பெறினே

என்று சங்க இலக்கியத்திலே சொல்லியிருக்கான். It is a mental Status-னு வந்தவுடனே ஆண்-பெண்ணுங்கிறதே கிடையாது. ஆகவே, காதலனுடைய முதல்படி என்ன? அதைத் திருநாவுக்கரசர் விஸ்தாரமாப் பாடினார். 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள், தன்னை மறந்தாள், தன் நாமம் கெட்டாள் இது தான் காதலினுடைய கடைசிநிலை. தான் என்பது அறவே அழிந்துபோவது. அறவே அழிஞ்சு போவதுதான் காதல் என்றால், அது இறைவனிடத்திலே தன்னை ஈடுபடுத்தி மறந்தாலும் காதலியிடத்திலே ஈடுபட்டுத் தன்னை மறந்தாலும் சரி, இது இரண்டும் ஒன்றுதானே! ஆகவேதான் இவர்கள் அப்படிப் பாடினார்கள். இந்த வெள்ளைக் காரங்களுக்கு அது புரியாததால், அவன் என்ன பண்ணிட்டான்? இதை லவ் பொயட்ரினு சொல்லி அது ரொம்பக் கேவலம் என்று சொல்லிவிட்டனர். திருவாசகத்திலும்கூட அம்பாளைப் பற்றி வந்த வரிகளை, போப் ட்ரான்ஸ்லேஷன் பண்ணினதுல அதை அப்படியே பிளாங்க்கா விட்டுவிடுவாரு ஆமாம் அது அவர்களுக்குத் தெரியாது. அதை எடுத்துச் சொல்லத் தமிழாசிரியர்களுக்குத் தெரியவில்லை. அதனால வந்த வினை அது. உண்மையான காதல் என்பது ஒரு மனநிலை. தான் என்பதை அறவே மறந்து மற்றொரு பொருளிடத்து ஈடுபடுவது உண்மையான காதல். அதைச் சங்க இலக்கியத்திலேயே பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே என்று சொல்லப்பட்டது. ஒருத்தன்கிட்டதான்