பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்61
 


அந்த மனநிலை ஏற்படும். அது ஏற்படும்போது என்ன மனநிலை இருந்ததோ அதுதான் காமம். காமம், காமம் என்பர். அது அணங்குமன்று, பிணியுமன்று. இந்தப் பாட்டு இருக்குது. இன்னொரு பாட்டும் இருக்குது. அது:

காமம் காமம் என்ப காமம்

அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்

முதுசுவற் கலித்தமுற்றா இளம்புல்

மூதா தைவந் தாங்கு

விருந்தே காமம் பெருந்தோ ளோயே

56. ஆண்டாள் பாட்டிலே தலைவி தலைவனுக்காக ஏங்குகிற தன்மை இருக்கின்றதல்லவா..?

57. அது ஒரளவுக்கு அகத்துறையிலே சம்பந்தப்பட்டதா இருக்கலாமல்லவா?

ஒரளவுக்கு அல்ல. முழுவதும், அகத்துறைதான். புருஷோத்தமன் என்ற ஒரு ஆண்தான் உண்டு. அவன் இறைவன். மற்ற எல்லா உயிர்களும் பெண்கள். ஆகையினாலே அது வந்து அகத்துறைப் பாடல்கள் என்பதில் தப்பு இல்லை.

58. சமீபத்திலே ஆண்டாளைப் பற்றி ஆய்வு, தமிழவன் பண்ணியிருக்கிறாரு அமைப்பியல், பின்னமைப்பியல் (Post Structuralism) சொல்லியிருக்காங்க. அதுல இரண்டு வகைகள் வருது. உதாரணத்திற்கு பாக்டின் என்ற ஒருவருடைய தியரியை வைத்து அணுகுகிறாரு. நான், நீ, அப்படி என்பதை "I and You இந்த இரண்டு விஷயம் வருது. அது ஒண்ணிலே வந்து ஒரு பகுதி உடலாகவும், ஒரு பகுதி உதிரியாகவும் வருது. உடல் பாடல் என்ற இரண்டு வகை வருது. புரியல.