பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


 இருக்கும்’ என்று கருதி மிகச் சில இடங்களில் விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சில இடங்களில் விளங்காதவை நீக்கப்பட்டுள்ளன.

இந்நூலின் படி திருத்தம் செய்து, நூல் முழு வடிவம் பெற உதவி புரிந்த முனைவர் ம.ரா.போ. குருசாமி, முனைவர் தெ. ஞானசுந்தரம், முனைவர் அ.அ. மணவாளன், திரு. C.P. கெளரி சங்கர் ஆகியோருக்கு எங்கள் நன்றி உரித்தாகும்.

வழக்கம்போல் இதனை நன்முறையில் அச்சிட்டு வெளிக்கொணரும் கங்கை புத்தக நிலைய உரிமையாளர் திரு. இராமநாதன் அவர்களுக்கும், திரு. திருநாவுக்கரசு ஐயா அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகும்.

திறனாய்வுக் களத்தில் அ.ச.ஞா. பதித்து வைத்த முத்திரைகளைக் கண்டுணர முடியும் என்ற துணிவிலே, பயன்தரும் என்ற நம்பிக்கையோடு இந்த நூலை வெளி யிடுகிறோம்.

அன்புடன் அ.ச.ஞா. குடும்பத்தினர்