பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்63



அமிழ்தத்துக்கு ஒரு யோசனை வந்தது. . சுவை என்றால் என்ன? அதை நான் அனுபவித்தாகணும்னு நினைச்சது. அமிழ்தம் என்பது ஒரு பொருள். உணவு ஆகிய பருப்பொருளும் இருக்குது. அதுல, சுவை என்பது குணானுபவம். அந்தச் சுவையை உடைய குணி அமிழ்து. இப்ப அந்தக் குணத்தை எல்லாரும் அனுபவிக்கிறார்கள். அந்தச் சுவையை உடைய அந்தக் குனி இருக்கிறதே. அது தன்னுடைய சுவையைத் தான் அறிய முடியாது.

60. அது உள்ளேயிருந்துதான் அனுபவிக்க முடியும்.

இப்போது இரண்டு இருந்தாத்தான் அனுபவம். ஒன்னு இருந்தா அது அனுபவம் இல்லை. இந்த அமிழ்து பார்த்தது. தன்னுடைய உருவத்தைத் தானே அனுபவிக்கப் பார்த்தது. நடக்கிற காரியமா, முடியலை. ஆகவே, ஆண்டவன்கிட்டே கேட்டதாம், அது. எல்லோரும் என்னைச் சாப்பிட்டுவிட்டுச் சுவை சுவைனு சொல்றாங்களே. நான் என்னை அனுபவிக்க வேண்டாமா என்று. அதுக்காகப் பிரித்தாக வேண்டும். சொற்பால் அமுது இவள் யான் சுவை என்னத் துணிந்து இங்கனே. என்று திருக்கோவையார் பாடுகிறார். சுவையையும் சுவைபடும் பொருளையும் பிரிக்க முடியாதே. இப்ப எப்படிப் பிரிஞ்சு இருக்கிறே. அது அமிழ்து, நீ சுவை-னு சொல்றியே எப்படினா நற்பால் வினைத் தெய்வம் நான் இவள் என்று பகுதி செய்தது'. தன்னுடைய சுவையை அறிவதற்காக அமிழ்து சுவை என்று பிரித்ததைப் போல ஒர் உயிர் நாங்க இரண்டு பேரும். இப்ப நாங்க ஒருவரை யொருவர் அனுபவிக்கனும்கிறதுக்காக இவள் என்றும் நான் என்றும் பிரிந்தோம் என்று அற்புதமாக எழுதியிருக்கிறார். உலகத்திலேயே இதற்கு ஈடு கிடையாது. திருக்கோவையார் பாட்டு சொற்பால் அமுது இவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/71&oldid=481110" இலிருந்து மீள்விக்கப்பட்டது