பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்பார்க்கிறான். இறை சொரூபத்தைத்தான் பார்க்கிறான். ஆகவே தனியாச் சொல்ல வேண்டியது ஒன்றுமில்லை. இப்ப 96-பூ அடுக்கியிருக்கிறான், குறிஞ்சிப் பாடலிலே. It is a list, alright, beyond that அதுல எதுவும் கிடையாது.

72. இப்ப உதாரணத்திற்குச் சங்க இலக்கியத்திலே ஓர் இடம். தலைவன் தலைவிக்கு இயற்கைக் குறிப்பைப் படைச்சுத் தலைவனுக்குத் தலைவி இருக்கின்ற மனோநிலையைச் சொல்ற மாதிரி நற்றிணைப் பாடல்களில் வருகிறது.

அதாவது, கவிஞனுடைய சாமர்த்தியம் சொல்லு கின்ற முறையிலே அதிலே உள்ளுறை இறைச்சி ஆக வந்து அதைப் படிச்சிக்கிட்டுப் போறப்ப ஒரு அர்த்தம் இருக்கும். அந்த அர்த்தத்தை விட்டுட்டுக் கீழே பார்த்தீங்கன்னா வேறு அர்த்தம் இருக்கும். இதுல இரண்டு வகை உண்டு. டோட்டலா வைத்துப் பார்ப்பது இறைச்சின்னு பேரு. முழுப்பாட்டையும்- தனியே பிரிக்கக் கூடாது-முழுப்பாட்டையும் படித்தவுடன் அதில் இருந்து ஒரு அர்த்தம் கண்டுபிடிப்பது இறைச்சி. லைன் பை லைன் பண்ணுவது அது உள்ளுறை.

உள்ளுறை என்பது - line by line

இறைச்சி என்பது- total

ஒரு பலாத்தோப்பு. அதில் வந்து ஒரு பன்றியை அடிச்சிட்டுக் கரடி இழுத்துக்கிட்டுப் போகுது. செத்துப் போன பன்றி நாறுது. பலரை ஈர்க்கும் ஒரு பாட்டு. முதலடியை மறந்துட்டேன் இது உள்ளுறை. இதுவரை இந்தப் பலா நல்லாத்தான் இருந்தது. இந்தக் கரடி வந்தது. இப்பத் தெருத்தெருவா மானம் போகப் பேசுது. பலாத் தோப்பு இதுவரையிலே வாசனை அடிச்சிக்கிட்டுக் கம கமன்னு இருந்துச்சு. இந்தப் பன்றி இழுத்துட்டுப் போறதுல, பலாத் தோப்பு நாற ஆரம்பிச்சுடுச்சு. இதுதான்