பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்71உள்ளுறை இதைத் தொல்காப்பியன் இறைச்சிதானே பொருட் புறத்ததுவே என்று சொல்லுவான். இறைச்சி, உள்ளுறை. இதெல்லாம் வேறு எந்தப் பொயட்ரியிலும் பார்க்க முடியாது. ஏனென்றால் இது இயற்கையோடு இணைந்த வாழ்வு pastoral poetryஇல் அவன் தனியே நின்று அதை வர்ணிக்கிறான். இங்கே தனியே நின்று வர்ணிக்கிறது இல்லை. எந்த வர்ணனையை எடுத்துக்கிட்டாலும் கவிஞன் அதுக்குள்ள உட்கார்ந்திருப்பான். வ.வெ.சு அய்யர் கூட அந்தத் தப்புப் பண்ணிருக்கிறாரு புரியாம எழுதியிருக்கிறாரு அய்யா, வ.வெ.சு அய்யர். சங்க இலக்கியப் பயிற்சி இல்லாததுனால. இது வந்து அவர் நினைக்கிற மாதிரி வெறும் வர்ணனைனு எழுதுறாரு வெறும் வர்ணனை அல்ல. அது வந்து இங்கிலீஷ் பொயட்ரியில தான் possible தமிழ்ல அது மாதிரி வரவே வராது.

73. உதாரணத்திற்குச் சைவத்தைப் பற்றி விரிவாக, சைவ சமயம், சைவ இலக்கியம் அதனுடைய வழியைக் கடைப் பிடிப்பதற்கு- நீங்க ஆய்வு செய்திருக்கீங்க. அதுல சைவ மதம் அல்லது சைவ இலக்கியம் அது தமிழர்களின் ஒருவகையான அறிவுத் தொகுப்பு, எபிஸ்டமாலஜி' என்று நினைக்கிறீர்களா?

எபிஸ்டமாலஜி என்று வார்த்தை சொல்கிறீர்கள். மறுபடியும் அவ்வாறு சொன்னீர்கள் என்றால், நான் ஒத்துக்கிற மாதிரி இல்லை. சைவ இலக்கியம் ஒரு அறிவுத் தொகுப்பு, பரம்பரையாக வந்த அறிவுத் தொகுப்பு என்று நினைக்கிறீர்களா?

அறிவுத் தொகுப்பா? அனுபவத் தொகுப்பா? வாழ்க்கைத் தொகுப்பா? இதை எது என்று சொல்றது? அறிவினாலே சிலவற்றை அறிகிறார்கள். அது தனியே இருக்கும்போது எபிஸ்டமாலஜி.