பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



74. சாத்திரங்களை எபிஸ்டமாலஜினு சொல்லலாமுங்களா?

சாத்திரங்கள், நீதி நூல்கள் இவையெல்லாம் எபிஸ்டமாலஜி. இதே மாதிரி தமிழ்ல கிடையாது. எல்லா வற்றையும் கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள். தமிழ்ல நீதி நூல் முதன் முதலில் ஆரம்பிச்சவன் வள்ளுவன்தான்.

ஒரு ஜெர்மன் research பண்ணிக்கிட்டு இருந்தான். கொஞ்ச நாள் அவன் என்கிட்ட guide என்கின்ற முறையில வந்துகிட்டு இருந்தான். அவன் எழுதினான். Tamilian race was so bad, nasty, rough that it required a Thiruvalluvar என்று, அத அவன் வந்து is it acceptable என்று கேட்டான்.

Definitely you better write itனு சொன்னேண். நானே அந்தக் கருத்துள்ளவன், ஒரளவிற்குத் தேவை ஏற்படும் போதுதான் ஒரு நூல் வரும். இந்த மாதிரி எழுதித்தான் அகம்-புறத்துல அவன் குட்டிச்சுவராப் போயிட்டான்.

75. சிவஞானபோதம் - இந்த மாதிரி...

அது வந்தது பிற்காலத்திலே.

76. அது வந்து எபிஸ்டமாலஜி-னு சொல்லலாமா?

அதுதான் சொல்கிறேனே, யாரோ மொழிப்பெயர்த்துருக்காங்க. சாத்திரங்கள் தொகுப்புனு Epistomology is a very broad word - it implies the results of an intellectual pursuit; அறிவினால் ஆராய்ந்து பார்த்துக் கண்ட முடிவுகள். வாழ்க்கையினுடைய, அதாவது, வேண்டுதல் வேண்டாமை, தேவை தேவையில்லாதவற்றைச் சொல்லுவது எபிஸ்டமாலஜி. இது மாதிரி ஒன்று தமிழில் பிரிக்க முடியாது.

77. தமிழுக்கு ஒரு எபிஸ்டமாலஜி இருக்கிறது மாதிரி...

அதுதான் திருக்குறள் இருக்கிறதே. அது மாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/80&oldid=481870" இலிருந்து மீள்விக்கப்பட்டது