பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்73பதினெண்கீழ்க் கணக்குங்குற பெயரிலே கண்றாவி யெல்லாம். உட்காருவது எழுந்திருப்பது பல் துலக்குவது, (இவற்றைத் தெரிவிக்கும் நூல் ஆசாரக்கோவை, அந்நூலினையே அ.ச.ஞா. இவ்வாறு சுட்டுகிறார்) எல்லாம் கண்றாவிக் கூத்துக்கள்.

78. அப்ப, இயற்கையோடும், மனிதனோடும் சம்பந்தப்படாத இலக்கியங்கள் இந்த மாதிரியாக முடிஞ்சு போச்சு?

அது ஒன்றும் பயனில்லாதது. இதில் திருவள்ளுவர் தப்பித்துவிட்டான். அவன் தப்பாப் பொறந்தவன். அவன் வந்து நீண்ட நூல் சொன்னாலும், அதை இலக்கியமாகப் பண்ணிட்டான். வாழ்வோடு இணைத்துவிட்டான்.

79. சாத்திரங்கள் இலக்கியமாகாத பட்சத்திலே அது இந்த மாதிரி உதவாமப் போய்விடுகிறது.

உதவாமல் போயிருந்தால். (அழிந்திருக்கும்) அது intended for a group of people; அதில் யுனிவர்சல் அப்ளிகேஷன் கிடையாது. அதனால் அந்த மக்களுக்குச் செவிவாயிலாக, நெஞ்சு களனாக, அவன் சொல்வன சொல்லி, அப்படிச் சொல்வதைக் கேட்டுக்கிறான். சரி தான் போ அவ்வளவுதான்.

80. தமிழ்ல மிக முக்கியமாக இருக்கக் கூடியது, சமஸ்கிருத எதிர்ப்பு அல்லது சமஸ்கிருதத் தொடர்பு முழுக்க இணைந்த மணிப்பிரவாளம். தமிழிலே இந்த இரண்டு போக்கு இருக்குங்க. இப்ப சமஸ்கிருதம், தமிழ் வேறு பாடான மொழிங்கிறதை மறந்துட்டு, ஒரு மொழி அல்லது கலாசாரம், இன்னொரு மொழி கலாசாரத்துடன் பரிவர்த்தனை இல்லாமல் இருக்க முடியுமுங்களா? உதாரணத்திற்கு, செவ்விந்தியர்களை எடுத்துக் கிட்டாக்க, அவுங்க எந்த ஒரு எக்ஸ்சேஞ்சுக்கும்