பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்மற்றவங்ககிட்டப் பேசல. அதனால அந்த இனமே அழிச்சிடுச்சு.

இந்த நிலைமை நீடித்தால்தான் இந்த மாதிரி தனித்துவம் கொண்டாடலாமே தவிர, தனித்துவம் என்பது possible இல்லை. இன்னும் ஒன்று நீங்க நினைக்கிற மாதிரி தொல்காப்பியன் காலத்திலே ஏதோ தனித் தமிழ் வந்தது என்கிறது, ஏதோ படிக்காதவன் பேசற பேச்சு. அது fraud. தொல்காப்பியத்துல கலந்து இருப்பது மாதிரி வேறு எதிலேயும் கலப்படம் இல்ல.

அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும் .

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் -

இந்த வரிகளெல்லாம் கலப்படத்தைத் தெளிவாக்கு கின்றன. என்று கூற இடம் இருக்கிறது.

வடமொழிச் சொற்களை எடுத்துத் தமிழில் பயன் படுத்தினால், தற்பவம் தற்சமம் என்று வரையறை செய்தார்கள். எப்போது இப்படி இலக்கணம் பண்ணிட்டானோ அந்தத் தொல்காப்பியன், அவ்வளவு கலந்து போச்சுன்னு அர்த்தம். இவ்வளவு கதையெல்லாம் அடிக்க முடியாது. தனித் தமிழ் அது ஊரை ஏமாற்ற வைத்துக் கொள்ளலாம். அதுல எனக்கு ஒன்றும் அப்ஜெக்ஷன் இல்லை.

ஆனால் பெர்சனலி ஒன்று இரண்டாவது, நிறைந்த culture கொண்ட மொழி- உங்களுக்குப் பிடிக்குது பிடிக்காதது என்பது வேற விஷயம். உங்களுக்குக் காமாலை, நீரழிவு. நீங்க சக்கரை சாப்பிடக் கூடாது. கிருஷ்ணா ஸ்வீட்டுனு ஸ்பெஷல் மைசூர் பாகு ஒன்று