பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்75
 


தயாரிக்கிறான். இந்தப் பூலோகத்துல அந்தச் சுவை மாதிரி வேறு எதிலும் கிடையாது. ஆழ்வாரே இச்சுவை தவிர என்று பாடுவது இதைச் சாப்பிட்டுத்தான் போல இருக்கு இப்ப உங்களுக்கு அதைக் கண்டாலே எரிச்சல். நான் ஆனந்தமாச் சாப்புடறேன். வெளியில போய்ச் சொல்றீங்க. 81 வயசுல இந்த மாதிரி போட்டு முழுங்குகிறது, எதில் இருந்து வருது? உங்க பொறாமையில இருந்து வருது. அதுபோல அனுபவிக்க முடியாதவன் பேசற பேச்சு. இதையும் படிக்காமல், அதையும் படிக்காமல் பெருந் தவறு பண்ணிட்டோம் நாம், வடமொழி பிடிக்காமல்.

இன்னொன்னு: வடமொழி யாது? நீங்களாகவே கற்பனை பண்ணிக்கிட்டீங்க, ஆரியன், திராவிடன் என்று சொல்வதில். ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இன்றைக்கு வடமொழியில மிகச் சிறந்ததுன்னு போற்றுகிறது சங்கரருடைய ஃபிலாசபி உண்டா இல்லையா? அப்புறம் இராமானுஜர் ஃபிலாசபி, விசிஷ்டாத்வைதம். இந்த இரண்டும் இயற்றியவன் யாரு? தமிழன்தான், தெரியுதா. இம். புத்தி இருக்குதா? அவன் பாப்பா னாவது, புடலங்காயாவது, இந்த சிறீபெரும்புதூர்ப் பார்ப்பனன் தமிழன். ஒருத்தன்- அப்ப காலடிங்கிறது மலையாளமும் இல்ல ஒரு கத்திரிக்காயும் இல்ல சங்கரன் இன்னும் அவன் காலத்துல 8ஆம் நூற்றாண்டுல மலையாளம்னு ஒன்று தனியாக இல்லை. கொடுந்தமிழ் நாடுன்னு பேரு. அப்புறம் என்ன கேடு? உங்களவன் இயற்றியதுதான் இப்போது உலகமெல்லாம் பேசுவது. பிரசித்தமா இருக்குது. ஏதோ ஒரு அரசியல் நோக்கத்திற்காகப் பிரிச்சாங்க. அன்றைக்கு அழிஞ்சோம் நாம்.