பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்79



88. மியர் Tifುಡಿ6ುಕT. இமாஜினேசன்...

அவ்வளவுதான். இப்ப கம்பனுடைய அந்த 'வண்மையில்லையோர் வறுமையின்மையால் என்பதைப் பற்றி, பெரிதாக எழுதியிருக்கிறேன். இராமாயணம் ஆறு காண்டத்துக்கு முன்னுரைகள் எழுதினேனே. ஒரு புது ஐடியா டெவலப் பண்ணி எழுதியிருக்கிறேன். இவன் ஏன் அப்படிப் பண்ணினான்னா, இது வரையில் அவருடைய கற்பனை கிற்பனை என்று சொல்லி இருந்தாங்க. நான்கூட அப்படி எழுதியிருக்கேன் ஒரு காலத்தில். அது வால்மீகத்தில் இருக்கு. இங்கேயிருந்து போனதாகக்கூட இருக்கலாம். அதற்கு ஒரு காரணம் கற்பித்தேன். கம்பனுக்குச் சடையப்பன் எவ்வளவுதான் சோறு போட்டுப் பிள்ளை மாதிரி வளர்த்தாலும் மனசுல நெருடல். என்னா இருந்தாலும் எனக்கென்று என் காலிலே நிற்க முடியல்லே. எங்க அப்பனாவது ஒழுங்காக ஒரு வசதி பண்ணியிருந்தான்னா இன்று இன்னொருத்தன் சோற்றைத் தின்ன வேண்டியதில்லை. எங்க அப்பாவை விட ரொம்ப அன்பா இருக்கான், அது fact என்னைக்கி இல்லா விட்டாலும் ஒருநாள் மனத்திலே நமக்குனு ஒரு நிலை இல்லாததனாலதானே, இங்கு வந்து வளர்கிறோம். என்று நினைத்திருக்கலாம். இதனுடைய தாக்கத்தால் ஒரு ஐடியா கிரியேட் பண்ணுறான்- இவன் உடையவன்; நான் இல்லாதவன்.

உடையான்முன் இல்லார்போல் ஏக்கற்று நிற்பான் என்று பாட்டே உண்டு (திருக்குறள்). இந்த நிலைமை இல்லாமப் போக வேண்டும். அதுதான் இமாஜினேஷன். அதனாலதான் இல்லாருமில்லை உடையாருமில்லை மாதோ என்ற பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/87&oldid=481877" இலிருந்து மீள்விக்கப்பட்டது