பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்81இலக்கியம்னா என்னா, யாரோ ஒருவனுடைய அனுபவம். அந்த அனுபவத்திற்கு ஒரு வடிவம் கொடுத்தான். அதுதான் இலக்கியம்.

93. அப்ப இலக்கியம் என்பது யுனிவர்சல் கேட்டகரின்னு...

கண்டிப்பா. உங்களுக்குத் தெரிந்ததில் நீங்கள் வடிவம் கொடுத்தீர்கள். நான் வேற்று நாட்டுக்காரன். நான் எனக்குத் தகுந்த வடிவம் கொடுக்கிறேன். அது எப்படி நீங்கள் இல்லே என்று சொல்ல முடியும்? ஆக, அது ஒருவனுடைய மனதுல பட்டுத் தெறித்த அனுபவம் தான் இலக்கியம். அப்படின்னா it has got existance. அவன் யார் கிட்டேயும் உட்கார்ந்து பாடிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் காட்டுல உட்கார்ந்து கிட்டுக்கூடப் பாடிக்கொண்டு இருக்கலாம். அதனால தான் வால்மீகிக்குச் சிறப்பே.

94. முக்கியமாக நீங்க இலக்கியத்தை ஏன் தேர்ந்தெடுத் தீங்க... இத்தனை வருடம் அதுலேயே இருந்திருக்கீங்க. உதாரணத்திற்கு- தமிழனுடைய வரலாறு- இலக்கியத்து வழியா வரலாறு பார்க்கிறீங்க. பெரிய புராணத்து வழியா தமிழனுடைய வரலாறு பார்க்கணும்னு நினைக்கிறீங்க. ஏன் இலக்கியத்து வழியாத்தான் தமிழனுடைய வரலாற்றைப் பார்க்கணும்னு நினைக்கிறீங்க?

அது நான். அப்பாவுக்கு பிள்ளையாகப் பிறந்தவன் நான். ஆனா விஞ்ஞானத்துலயே படிச்சதுனால, இந்தப் பார்வையே மாறிப் போய்விட்டது. அது பெரிய உதவி.

95. உங்களுக்கு ஒப்புதலா இருக்குமா, இல்லையான்னு தெரியல... உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட குழு மக்களுடைய வாழ்க்கையை அறிஞ்சுக்கிடனும்னா, அவங்களுடைய இலக்கியம் வழியாகத்தான் அதை

அ.ச.ஞா.ப-6