பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்போலும்; ஆயிரங்கள் ஆன நீதி அவை உணர்ந்த தருமன் தேயம்வைத்திழந்தான் போலும். சீச்சீ சிறியர் செய்கை செய்தான் என்று பாடினான். ஆயிரங்களான நீதி-அவன் உணர்ந்த தருமன். மற்றவங்க மாதிரி படித்து விட்டுப் பிரசங்கம் பண்ணிச் சம்பாதிக்கிறதுக்காகப் படிக்கல அவன். அந்தச் சொல்லினுடைய தத்துவத்தை உணர்ந்து பயன்படுத்துறான். இப்போது இதுதான் மொழி வளம். இந்த tradition இருக்கிறதுனால அதை வைத்துப் புதிய தாக்கங்கள் உண்டாகுது.

98. உதாரணத்திற்கு நீங்க சொன்ன மாதிரி, ஒரு இனத்திற்கு மொழி நினைவுனு ஒண்ணு உண்டுங்களா?

கண்டிப்பாக உண்டு. அதை மறுக்க முடியாது. அதாவது லிங்குஸ்டிக் மெமரி என்று அவன் சொல்றது. அடிப்படையாக, ஒரு கொஞ்ச நாள்வரையில் ஒரு எட்டு வயது வரையில்- ஒரு இடத்துல வளர்ந்துட்டு அதுக்கு அப்புறம் எங்கே போனாலும் சரி, இந்த பேஸிக் கான்செப்ட் போகவே போகாது, அந்தக் குழந்தைக்கு. நீங்க கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு வழி என்னவென்றால் ஒருவழி சொல்லுவான் போலீஸ்காரன். இந்த ராஜேந்திரன் ஏதோ தப்புப் பண்ணிட்டாரு, பேர மாத்திக் கிட்டாரு. கோவிந்தராஜன் பேர சொல்லிக்கிட்டே போராரு ஒண்னும் பண்ண முடியாது. உஷாரா எந்த நேரம் கேட்டாலும் கோவிந்தராஜங்கிறாரு என்னடா வழின்னு பார்த்தான். நாலு பேரு பேசிக்கிட்டுப் போய்க் கொண்டு இருந்தபோது, இராஜேந்திரா என்று கூப்பிட்டதும். ஊம். என்று திரும்பிப் பார்ப்பான்.

99. அதுதான் லிங்குவிஸ்டிக் மெமரி...