பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்87



தர்ரேன்னு சொல்லிட்டு வாங்கியாந்து போட்டேன். அந்த மாதிரி எத்தனையோ, புத்தகங்களைக் காணாமல் போட்டு விடுவேன். எனக்கு அந்த மாதிரி ’வீக்னஸ்’

105. புதுமைப்பித்தன் கதையை நீங்க படிக்கும்போது உங்களுக்கு எப்படி இருந்ததுங்க?

மக்களுடைய உணர்ச்சியை ஆச்சரியமான முறையில வெளியிடுகிறவன் புதுமைப்பித்தன். எனக்கு- அவனுக்கு அப்புறம் ஜெயகாந்தன் ஒருத்தன்தான். உணர்ச்சிகளை வெளியிடுவதற்கு, புதுமைப்பித்தன் Smart-ஆகப் பண்ணுவான், அவன் சாமர்த்தியம்.

106. ஆனா, புதுமைப்பித்தனுக்குப் பழைய தமிழ் இலக்கியத் தோடு உள்ள தொடர்பைப் பார்த்துக்கிட்டு நீங்க இருந்தீங்க. ஆனா, ஜெயகாந்தன்கிட்ட அப்படியில்ல ஏன்? புதுமைப்பித்தன் பார்த்தீங்கன்னா சிற்பியின் நரகத்துல பார்த்தீங்கன்னா ஏறக்குறைய...

கேளுங்க... அதுக்குக் காரணம் என்னான்னா, அவனுடைய சூழ்நிலை வேறே, இவனுடைய சூழ்நிலை வேறே. இவன்கிட்ட இருந்த பிரைட்னஸ்ஸ பார்த்து ஊக்குவித்தது எஸ்.ஆர்.கேதான் அவனுடைய இறந்த நாளுக்கு நான்தான் பிரிசைட் பண்ணினேன். அப்ப ஜெயகாந்தன். என்னை மனுஷனாக்குனவரே எஸ்.ஆர்.கே. என்றான் உண்மை அது. அவனில் இருந்து கம்யூனிஸத்தைப் பிரிக்கவே முடியல.

107. புதுமைப்பித்தன் நீங்க சொன்ன மாதிரி, தமிழ் மரபோடு வாழ்ந்தவர்...

ஆமாம், மரபோடு வாழ்ந்தவன். இவனுக்கு மரபுப் பழக்கம் இல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/95&oldid=481107" இலிருந்து மீள்விக்கப்பட்டது