பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்91114. எங்கே அது நடந்துச்சு, சென்னையிலா, பாண்டிச் சேரியிலா?

இங்க. மயிலை சாஸ்திரி ஹாலில், நான் கடைசிப் பேச்சாளன். காத்திருக்கேன். நா.ப. என்ன பண்ணினான்! என்னமோ மூடு அவனுக்கு மட்டிப் பய, பாரதிதாசன் பெரும்குடிகாரர். கடகடன்னு உளறுவாராம், சாக்கடை யிலயெல்லாம் உருளுவாராம். அப்புறம் அவர வந்து தூக்கிப் போட்டு இது பண்ணுவாங்களாம் என்றெல்லாம் பேசி விட்டான்.

115. யார் சொன்னது?

நா.பா. அப்படியே உட்கார்ந்திருந்தேன். சின்னக் காகிதத்தை எடுத்துத் தயவு செய்து அடுத்த பேச்சா என்னைப் போடவும் தலைவருக்கு எழுதியிருந்தேன். அவரு இன்பர்மேசன் மினிஸ்டரா இருந்தாரு இல்லீங்க நீங்க கடைசீலப் பேசுங்க. சரீன்னுட்டு சொல்லிட்டேன். பேசனவுடனே எனக்கு வேற வேலை இருக்குன்னு சொன்னான் நா.பா. நான் பார்த்தசாரதி இங்க வா. உட்காருன்னு சொன்னேன். என்னைய்யா ஆசா. ஆமாம் உட்காரு. நீ பேசுனியே, நீ பாரதிதாசனைப் பார்த்தது இல்ல. அவரு எனக்கு ரொம்ப வேண்டியவரு. அதாவது, கட்சிமுறைணு எடுத்துக்கிட்டா அவருக்கும் எனக்கும் ஸ்நானப்பிராப்தம் கூட கிடையாது. ஆனா அவரு எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர். இப்ப நான் சொல்றேன் கேட்டுக்கொள். குடிகாரர், உண்மை. அது நஷ்டம் யாருக்கு? அவர் பெண்டாட்டிக்கும் பிள்ளைக்கும், உனக்கும் எனக்கும் ஒன்றும் இல்ல. உங்க யோக்கியதை சொல்லட்டுமா? சிறியகள் பெறினே, பெரியகள் பெறினே யாம்பாட தான் உண்ணும் மன்னே.. இதுதான்டா உங்க